பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

மருந்தின் வாணிக உரிமைப் பெயர்.

achylia : உணவுப்பால் இன்மை ; சாதின்மை; பித்தநீரின்மை : உடலில் உணவிலிருந்து ஊறும் கொழுப்புக் கலந்த வெள்ளை நிணநீர் இல்லாதிருத்தல்.

acid : அமிலம் (காடிப் பொருள்); திராவகம் : கரைசல்களில் ஹைட்ரஜன் அயனிகள் அளவுக்கு மேல் உண்டாக்கக்கூடிய பொருள் எதனையும் இது குறிக்கும். இது. நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றுகிறது. இதனை ஒரு காரத்தினால் செயலற்றதாக்கிவிடலாம். அப்போது ஓர் உப்பு உண்டாகும். இவ்விரு சோதனைகள் மூலம் இதனை அடையாளம் காணலாம்.

acidaemia : அமில மிகைப்பு; அமிலப் பெருக்க நோய்; அமில ரத்தம் : இரத்தத்தின் அளவுக்கு மீறிய அமிலத்தன்மை. இதனால், ஹைட்ரஜன் அயனிகள், இயல்புக்குக் குறைந்த PH அளவில் உண்டாகின்றன. காற்றோட்டக் குறைபாடு, கார்பன்டையாக்சைடு பெருக்கம் காரணமாக இது உண்டாகும் போது இதனை 'சுவாச அமிலப் பெருக்கம்' என்பர். தசைகளில் லாக்டிக் அமிலம் என்ற காடிப்பொருள் அதிகரிப்பினால இது உண்டாகுமானால், அது வளர்சிதை மாற்ற அமிலப் பெருக்கம் என்று கூறப்படும்.

acid-fast : அமிலம் ஏற்கா தன்மை ; அமிலத்துக்கழியாமை :

acidalcoholfast : அமில-ஆல்ககால் எதிர்ப்பு : பாக்டீரியாவியலில் ஓர் உயிரி மாசுபடும்போது, ஆல்ககாலினாலும், அமிலத்தாலும் அது நிறமிழப்பதற்கு எதிர்ப்பு உண்டாகிறது.

acid-base balanco : அமில-உப்பு மூலச் சமநிலை ; அமிலக காரச் சமன்பாடு : இரத்தத்திலும் உடல் நீர்மங்களிலும் அமிலத்திற்கு உப்பு மூலங்களுக்குமிடையில் சமநிலை நிலவுதல்.

acid fast : அமில எதிர்ப்பு : பாக்டீரியாவியலில் ஓர் உயிரி மாசுபடும் போது. நீர்த்த அமிலங்கள் பட்டால் நிறம் மாறாமலிருத்தல்.

acidity : அமிலத் தன்மை : காடித்தன்மை ; புளிப்புத் தன்மை. அமிலத் தன்மையின அளவு PH அளவு களில் அளவிடப்படுகிறது. PH 6.69 என்பது மிகவும் வலுக்குறைந்த அமிலத்தைக் குறிக்கும். PH1 என்பது ஒரு வலுவான அமிலத்தைக் குறிக்கும்.

acidimeter : காடிமானி : காடிப் பொருள்களின் ஆற்றலை அளக்கும் கருவி.

acidosis : அமிலவேற்றம்; அமிலத்தேக்கம்; குருதி அமிலப் பெருக்கம் : இரத்தத்தில் காரப்பொருள் குறைந்து, அளவுக்கு மேல் அமிலப் பொருள் (காடிப் பொருள்) இருத்தல். இதனால் இரத்தத்தில் அமில உப்பு மூலச் சமநிலை சீர்கெடுகிறது.

acid phosphatase test : அமில ஃபாஸ்ஃபேட்டாஸ சோதனை : கார் போஹைட்ரேட்டுகளின் ஃபாஸ்ஃபேட் டெஸ்டர்களை ஓர் அமில ஊடகத்தில் ஒருங்கிணைக்கும் ஒரு செரிமானப் பொருள் (என்சைம்). இந்தப் பொருளின் அளவு இரத்தத்தில் அதிகரிக்குமானால் அது ஆண்பால் உறுப்புப் பெருஞ்சுரப்பியில் புற்று நோய் உண்டாகியிருப்பதை குறிக்கும்.

aciduria : அமிலச் சிறுநீர் : அமிலம் கலந்த சிறுநீர் வெளியேறுதல் . மன வளர்ச்சி குன்றியிருப்பதற்கு இது ஒரு காரணம் என்று அண்மை ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

acini : ஊனீர் சுரப்பு இழைகள் : சிறுபையுறை போன்ற ஊனீர்