பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது26 acupan : அக்குபன் : 'நெஃபோ பன்' என்ற மருந்தின் வாணிகப் பெயர். acupressure; ஊசியழுத்த முறை : ஊசியினால் நரம்பு மற்றும் குருதி நாளத்தை அழுத்தி நோயைக் குணப்படுத்தும் முறை.

acupuncture : அலகுமுனை மருத்துவம் : உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஊசியால் துளையிட்டு தோயைக் குணப்படுத்தும் அல்லது நோயைக் குறைக்கும் மருத்துவ முறை.

acyanosis : நீலநிறமின்மை : ஆக்சிஜன் சரிவர ஊட்டப்படாத இரத்தம் சுழல்வதனால் தோல் நீலநிறமாகக் காணப்படாதிருத்தல்.

acyanotic : நீலத்தோலின்மை : பிறவியிலேயே உண்டாகும் நெஞ்சுப்பை நாளக் கோளாறுகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுதற்குப் பயன்படும் சொல்

acyclovir : அசிக்ளோவிர்தேமல், படர்தாமரை போன்ற தோல் நோய்களைக் குணப்படுத்துவதற்குப் பயன்படும் கிருமி ஒழிப்பு மருந்து.

acystia : சவ்வுப்பை இன்மை ; பித்த சிறுநீர்ப்பையின்மை : பித்த நீர்ப்பை , சிறுநீர்ப்பை ஆகியவை பிறவியிலேயே இல்லாதிருத்தல்

adam's apple: குரல்வளைக் கூர் குரல்வளை மணி : கழுததின முன் பகுதியில் குறிப்பாக வய துவந்த ஆண் களிடம் உள்ள குரல் வளைப்படைப்பு இது. சங்குகளைக் குறுத்தெலும்பின் இருசிற கங்களும் சந்திக்கு மிடத்தில் அமைந்துள்ளது.

adaptability:தகவமைப்புத் திறன்: தழுவு திறன் : நிலைமைக்குத் தக்க படி உளவியல் முறையிலும், உடலியல் முறையிலும் தன்னை மாற்றியமைத்துக் கொள்வதற்கான திறன்.

adaption : பழக்கும் திறமை ; ஏற்புத்திறன், தகைவு; தகவமைப்பு: உயிர்கள் தங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலைக்கொப்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் திறன். இஃது உறுப்பு, நிறம் முதலான வற்றில் அமையும்.

adcortyl ; அட்கார்ட்டில் : 'டிரி யாம்சினலோன' என்ற மருந்தின் வாணிகப் பெயர். வாய்ப்புண்களுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு வகைப் பற்பசை.

addiction; தீய பழக்கத்திற்கு அடிமையாதல்: பழக்க அடிமைத்தனம்; பழக்கப்பற்று. போதை மருந்துகள், ஆல்ககால், மதுபானம், புகையிலை போன்ற போதைப்பொருள்களை உண்ணும் கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகி விடுதல் . இந்தப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்தப் போதைப் பொருள்களை நாடிச் செல்கிறார்கள்

addition : சேர்த்தல்

addison's disease : அடிசன் நோய் (குருதிச் சோர்வு நோய்) தோல் கருமை நோய் : வரவரத் தளர்ச்சியூட்டும் குருதிச் சோர்வுடன் மேனியில் ஊதா நிறம் படர்விக்கும் ஒரு நோய். குண்டிக் காய்ச் சுரப்பியின் புறப்பகுதியில் கார்ட்டிசால், ஆல்டோஸ்டெரோன் என்னும் சுரப்புப் பொருள் குறைவாகச் சுரப்பதால் இது உண்டாகிறது. இதனால், இரத்தத்தின் அளவு குறைதல், இரத்த அழுத்தம் குறைதல், எடைக் குறைவு. நரம்புத் தளர்ச்சி, தசை நலிவு.