பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


argon: ஆர்காள் (மடியம்): காற்று மண்டலத்திலுள்ள அணு எடை 18 உடைய , இயக்கத் திறனற்ற ஒரு வாயு.

argyll robartson pupil : ஒளியுணர்விலாக் கண்மணி : கண்ணின் பாவை ஒளியுணர்வு இல்லாதிருத்தல். நரம்பு மேகப் புண்ணில் இந்நிலை உண்டாகிறது. நடு நரம்பு மண்டலம் முழுவதும் திட்டுத் திட்டாகத் தடிப்புக் காணும் நோய் உண்டாகும் போதும் நீரிழிவு நோயின் போதும் இந்நோய் ஏற்படலாம்.

ariboflavinosis : வைட்டமின் B குறைபாடு: 'ரிபோஃப்ளேவின் போன்ற வைட்டமின் B கலவைக் கூறுகள் இல்லாமையால் ஏற்படும் குறைபாட்டு நிலை.

arief : ஆரியஃப் : ஃபுளுஃபினேம் அமிலத்தின் வாணிகப் பெயர்.

arnold chiari malformation : 'ஆர்னால்ட் சியாரி மூளைக் கோளாறு : மூளையின் ஆதாரத்தைப் பாதிக்கக்கூடிய பல கோளாறுகளின் ஒரு தொகுதி. தலையில் நீர் தங்கி மூளை நீர்க் கோவை ஏற்படும்போது இவை பெரும்பாலும் உண்டாகின்றன.

arrhythmia : பிறழ்வு இதயத் துடிப்பு; லயமின்மை : இதயத் துடிப்பு இயல்பான கதியிலிருந்து பிறழ்ந்திருத்தல்.

arsenic : ஆர்செனிக் உள்ளியம் : அரிதார நஞ்சு ; சவ்வீரம் உடல் நலியச் செய்யும் இரத்த சோகை. இரைப்பை குடல் கோளாறு, நரம்புக் கோளாறு போன்ற நோய்களை இந்தக் கடும் நஞ்சு உண்டாக்குகிறது.

artame : ஆர்ட்டான் : 'பென்செக்சால்' எனற மருந்தின் வாணிகப் பெயர்

artefact : செயற்கைத் திசு மாற் றம் ; திசுவின் கட்டமைப்பில்

61

செயற்கையான மாற்றத்தை உண்டாக்குதல்.

arteralgia : தமனி நோவு; தமனி வலி : இதயத்திலிருந்து குருதி கொண்டு செல்லும் நாளமாகிய தமனியில் ஏற்படும் வலி.

arteriography : தமனி இயக்க முறை; தமனி வரைவியல் : ஊடுருவக் கூடிய ஒரு திரவத்தை ஊசி மூலம் செலுத்தி தமனி மண்டலம் இயங்குவதைக் காட்டுதல்.

arteriola: நுண்தமனி ; குருதி நாடி; குறுந்தமனி : ஒரு தமனியோடு இணையும் ஒரு நுண்தமனி , தமனிகளிலிருந்து குருதிநாளங்களுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் சிறிய இரத்த நாடிகள். பின்னர் சிரைகள் மூலம் இரத்தம் இதயத்திற்குச் செல்லும்.

arteriopathy : தமனி நோய்; தமனி நலிவு ஏதேனுமொரு தமனியில் உண்டாகும் நோய்.

arterioplasty : தமனி அறுவை மருத்துவம்: தமனிச் சீரமைப்பு: தமனி அமைப்பு : ஒரு தமனியில் ஏற்படும் நோயைக் குணப்படுத்துவதற்காகச் செய்யப்படும் அறுவை மருத்துவம்.

arteriosclerosis: தமனி இறுக்கம்; தமனித் தடிப்பு : முதுமை காரணமாக தமனி நலிவடைந்து மாற்றமடைதல் குருதிக்குழாயின் இடைமென் தோல் தடிப்பதால், இது உண்டாகிறது.

arteriotomy : குருதி வடிப்பு; தமனித் திறப்பு: தமனியை வெட்டி அல்லது ஊசியால் துளையிட்டு இரத்தத்தை வடியவிடுதல்.

arteriovenous . தமனி நரம்பு; தமனிச் சிரைக்குரிய; தமனிச்சிரை சார் : ஒரு தமனியும், ஒரு நரம்பும் தொடர்புடைய எதுவும்.

arteritis : நாடி அழற்சி, தமனி அழற்சி; தமனியழல் : இதயத்தி