பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1000

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

shoulder girdle

999

sick building..


shoulder girdle : தோல்பட்டை தோல் வளையம் : ஒருபுறம் கழுத்துப்பட்டைக்கும் இன்னொரு புறம் தோள்பட்டை மேற்கை இணைப்புக்கும் இடைப்பட்ட பகுதி.

show : நன்னிக்குடம் உடைதல் : பிள்ளைப் பேறுக்கு முன்பு ஏற்படும் நீர்மக் கசிவு.

shredded appearance : கந்தைக் கீற்றுத்தோற்றம் : மிக அதிக வெப்பம் அல்லது குளிரால் பாதிக்கப்பட்ட (இயக்கு) என்புத் தசையில் திடப் பொருளாலான குறுக்குப்பட்டை களுக்கிடையே வெளிப்பரப்புகள்.

shrinking lungs : குறுகும் நுரையீரல்கள் : சிஸ்டமிக் லூப்பாஸ் எரித்திமட்டோசிஸ் நோயில் இடைத்திரை உயர்ந்து, நுரையீரலுறை அடுக்குகள் ஒட்டியிணைந்து, நுரையீரல் திசு தட்டுப்போல் சுருங்கி, இடைத் திசு விளைவால் நுரையீரல்கள் அளவில் சிறுத்தல்.

shunt : தடமாற்றம் : இரத்தம் வழக்கமான பாதையில் செல்லாமல் தடம் மாறிச் செல்தல்.

sialagogue : உமிழ்நீர் பெருக்கி; உமிழ்நீர் ஊக்கி : உமிழ்நீர் சுரப்பதை அதிகரிக்கும் மருந்து.

sialitis : உமிழ்நீர் சுரப்பழற்சி : உமிழ்நீர் சுரப்பி, அல்லது உமிழ்நீர் நாள அழற்சி.

sialoadenectomy : உமிழ்நீர் சுரப்பி நீக்கம் : ஒரு உமிழ்நீர் சுரப்பியை வெட்டியெடுத்தல்.

sialoadenotomy : உமிழ்நீர்சுரப்பி வெட்டு : உமிழ்நீர் சுரப்பியைக் கீறிவடித்தல்.

sialogram : உமிழ்நீர்ச் சுரப்பிப் படம் : உமிழ்நீர்ச் சுரப்பிகள், நாளங்கள் ஆகியவற்றின் ஊடு கதிர்ப்படம்.

sialolith : உமிழ்நீர்ச் சுரப்பிக்கல்; உமிழ்நீர்க் குழாய்க்கல் : உமிழ் நீர்ச் சுரப்பிகளில் அல்து நாளங்களில் ஏற்படும் கல்.

sialometaplasia : உமிழ்சுரப்பு மாற்று வளர்ச்சி : உமிழ்நீர் சுரப்பிகளின் மாறான வளர்ச்சி.

sialoschesis : உமிழ்நீர்சுரப்புத் தடை : உமிழ்நீர் சுரப்பு தடைபடுதல்.

sialosis : உமிழ்நீர் சுரப்பி வீக்கம் : உமிழ்நீர் சுரப்பிகள் வீங்கியி ருத்தல்.

SIB : தற்காய நடத்தை : தனக்குத் தானே காயம் உண்டாக்கிக் கொள்ளும் நடத்தை முறை.

sibling : ஒரு தாய் மக்கள்; உடன் பிறப்பு : ஒரே தாய் தந்தையருக்குப் பிறந்தவர்களில் ஒருவர்.

sickle-cell : அரிவாள் உயிரணு.

sick building syndrome : கட்டிட வியாதி நோயியம் : பெரிய,