பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/999

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

shifting dullness

998

shoulder frozne


shifting dullness : இடமாறும் மந்த ஒலி : ஒரு நோயாளி பக்கங்களில் திரும்பும்போது ஈர்ப்பு விசை காரணமாக வயிற்றுள்ளுறைக் குழிவறை, நுரையீரலுறைக் குழிவறையிலுள்ள நீர்மம் இடம்மாறும் நிலை.

shigella : ஷிகெல்லா : சீதபேதி விளைவிக்கும் சில நுண்ணுயிரிகள் அடங்கிய பாக்டீரியா வகை. கிராம் சாயம் எடுக்காத உருண்டைக் கிருமி சீதபேதியைக் கொள்ளை நோயாகப் பரப்பும் கிருமிகளில் முக்கியமானது. இது உணவு, நீர்மூலம் பரவுகிறது.

Shigeliosis : ஷிகெல்லாதொற்று : விகெல்லா கிருமிகளால் ஏற் படும் தொற்று, கிருமி இரத்த சீதபேதி.

shin bone : முழங்கால் எலும்பு; கணைக்கால் எலும்பு : முன்கால் எலும்பின் மைய எலும்பு.

shingles : அரையாப்பு : இடுப்பைச் சுற்றிலும், உடம்பிலும் பயற்றம் பருப்பு அளவில் மென் குருக்களை அள்ளி இறைக்கும் நோய், நோய்க்கிருமி உணர்ச்சி நரம்புகளைத் தாக்குவதால் கடும்வலியுடன் இது உண்டாகிறது.

shin-splints : காலெலும்புக் கட்டு : மிகவும் கடுமையான உடற் பயிற்சியால் கால் எலும்புப்பகுதியில் வலி.

shivering : நடுக்கம் : வெப்பம் வெளிப்படுத்தும் தசைகளின் தானியங்கிச் சுருக்கம்.

shock : அதிர்ச்சி : கடுமையான காயம் அல்லது நோய் காரணமாக உண்டாகும் இரத்த வோட்டச் சீர்குலைவினால் ஏற்படும் நிலை. இரத்தத்தின் அளவு திடீரெனக் குறைவதால் இது உண்டாகிறது. இரத்த அழுத்தம் வீழ்ச்சியடைதல், நாடித் துடிப்பு அதிகரித்தல், பதற்றமடைதல், தாகமெடுத்தல், தோல் குளிர்ச்சியடைதல் இதன் அறிகுறிகள்.

short bowel syndrome : சிறு குடல் நோயியம் : சிறுகுடலின் பெரும்பகுதியை வெட்டியெடுத்ததைத் தொடர்ந்து பல் வேறு ஊட்டக் குறைபாடுகள் ஏற்படுதல்.

short's syndrome : ஷார்ட் நோயியம் : பிரிட்டிஷ் இதய மருத்துவரின் பெயர் கொண்ட வியாதிப்புழை நோயியம்.

shoulder, frozne : அசையாத் தோள் : மேற்கை உடம்புடன் சேருமிடத்தில் காரை எலும்பும் முதுகுப்பட்டை எலும்பும் சேருமிடத்தில் மூட்டுறையுடன் ஒட்டியிருத்தல்.