பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1002

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

siderocyte

1001

sigmoidoscope


சிடெரின் முன்னணுக்களும், நிறக்குறை நுண்ணுச் சோகையும் உள்ள சிகிச்சையால் குணமடையா சோகை.

siderocyte : சிடெரின் குருணையணு : இரும்புச் சத்துக் குருணைகள் கொண்ட இரத்தச் சிவப்பணு.

sideromycin : சிடெரோமைசின் : இரும்புச்சத்து ஏற்பைத் தடை செய்து, நுண்ணணு வளர்ச்சியைதடுக்கும் (நோய்) உயிரி எதிர்ப்பி.

siderophore : சிடெரின் விழுங்கணு : ஹீமோசிடெரின் கொண்ட ஒர் உட்கரு விழுங்கணு.

siderosis : மிகைக்குருதி அயம்; இரும்பேற்றம் : இரத்தத்தில் அல்லது திசுக்களில் அயச்சத்து (இரும்பு) அளவுக்கு அதிகமாக இருத்தல், அயஆக்சைடு நுரையீரலுக்குள் செல்வதால் நுரையீரல் அழற்சி உண்டாகிறது.

siemens : சீமென்ஸ் : ஒரு ஒம் தடையுடைய உடலில் ஒரு வோல்ட்டுக்கு ஒரு ஆம்பியர் கடத்து திறன் குறிக்கும் அளவு.

Sievert : சீவெர்ட் : உள் ஏற்கப்பட்ட கதிர்வீச்சு ஆற்றலின் அளவுக் கணிப்பு.

sigmoid : 'எஸ்' எழுத்து வளவுை; 'S' உரு; இரட்டை வளைவுரு :

நெளிகுடல் : 'S' என்ற ஆங்கில எழுத்துப்போல் வளைந்துள்ள வடிவம்.

sigmoidectomy : வளைகுடல் நீக்கம் : வளை பெருங்குடலை முழுவதும் அல்லது ஒரு பகுதியை அறுத்து நீக்குதல்.

sigmoidoproctostomy : வளைகுடல் நேர்க்குடலிணைப்பு : வளை குடலையும் நேர்க்குடலையும் அறுவை முறையில் இணைத்தல்.

sigmoidoscope : வளைகுடல் நோக்கி : குதத்துளைக்குள் ஒரு கடினமான குழல் வடிவ விரிப்புக் கருவி செலுத்தி வளை குடலை (ஆய்ந்து) நோக்கல்.