பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1003

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sigmoidoscope

1002

silo-filler's...


sigmoidoscope : வளைவுப்பார்வைக் கருவி; வளைகுடல் நோக்கி; நெளி உட்காட்டி : மலக்குடலையும் பெருங்குடலின் 'S' வளைவுப் பகுதியையும் கண்ணால் பார்ப்பதற்கு உதவும் கருவி.

sigmoidostomy : குத அறுவை; வளைகுடல் திறப்பு; குதவாயமைப்பு : பெருங்குடலின் 'S' வளைவுப் பகுதியின் இறுதியில் கீறிச்செயற்கைக் குதம் உண்டாக்குதல்.

sign : நோய்க்குறி; தடையம்; அறிகுறி : ஒரு நோய் பீடித்திருப்பதை குறிக்கும் வெளிப்படையான அறிகுறி.

signa : மருந்துச் சிக்னா குறிப்பு : மருந்தளவு, எத்தனை முறை, கொடுக்கும் வழி ஆகியவற்றைக் குறித்தெழுதித் தரும் மருந்துக் குறிப்புச் சீட்டில் பயன்படுத்தும் சொல்.

signet ring cells : முத்திரை மோதிர அணுக்கள் : இரைப்பையின் நாராக்கப் புற்றுநோயிலுள்ள உட்கரு ஒரு பக்கம் தள்ளப்பட்ட சீதம் நிறைந்த கொடும் புற்றணுக்கள்.

significant : குறிப்பிடத்தக்க : 1. முக்கியமான, 2. புள்ளி விபர இயலில், தற்செயலாக நிகழ்ந்த முடிவுகள் எனும் வாய்ப்பு சிறிதுமில்லாத, ஒரு வேறுபாடு, புள்ளிவிவர இயல்படி குறிப்பிடத்தக்கதென கருதப்படுவது.

silentgap : ஒசையில் இடைவெளி : உயர் இரத்த அழுத்தம் கொண்ட சில நோயாளிகளில் கேட்பொலியின்போது ஏற்படும் இடைவெளி. இந்த தவறை தவிர்க்க கேட்பு முறையில் இல்லாமல் தொட்டு உணர் முறையில் இரத்த அழுத்தம் அளக்க வேண்டும். அழுத்தப் பட்டை காற்றிறக்கும்போது ஒலிகள் திடீரென்று மறைந்து, இரத்த அழுத்தம் மிகவும் குறைவான அளவுள்ளபோது மீண்டும் தோன்றுவது.

silicone : சிலிக்கோன் : நீர்மீது ஒட்டும் தன்மையில்லா ஒரு கரிமக் கூட்டுப்பொருள்.

silicosis : நுரையீரல் தூசு அழற்சி : உலோக அரைவை, கல்லு டைப்பு போன்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு தூசி காரணமாக உண்டாகும் நுரையீரல் அழற்சி.

silicotuberculosis : சிலிக்கோ டீபி : நுரையீரல் காசநோயுடன் சிலிக்கான் நோயும் சேர்ந்து இருப்பது.

silo-filler's disease : சிலோ-நிரப்புவோர் நோய் : சிலோ வேலை செய்பவர்கள், நைட்