பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

alveolar capillary block syn...

102

amaurotic


alveolar capillary block syndrome : நுரையீரல் கண்ணறைத் தந்துகி அடைப்பு நோய் : நோய்க் காரணம் கண்டறியப்படாத ஒர் அரிய நோய். இதில் நுரையீரல் கண்ணறை உயிரணுக்கள் பருத்துவிடுவதன் காரணமாக ஆக்சிஜன் பரவுதல் நடை பெறாமல் முச்சடைப்பு, தோல் நீலநிறமாதல், வலது இதயம் செயலிழத்தல் போன்ற கோளாறுகள் உண்டாகின்றன.

alveolitis : நுரையீரல் கண்ணறை வீக்கம் : நுரையீரல் கண்ணறை களில் வீக்கம் ஏற்படுதல். பூந்தாது (மகரந்தம்) போன்ற ஒர் அயற் பொருளைச் சுவாசிப்பதால் இது உண்டாகிறது. இதனை 'அயற்பொருள் ஒவ்வாமை துரையீரல் கண்ணறை வீக்கம்' என்பர்.

alveolus : மூச்சுச் சிற்றறை; கண்ணறை : 1. நுரையீரலுள்ள காற்றுக் கண்ணறைகள் 2. பல்லுக்கு ஆதரவாகவுள்ள பல் பொருந்து குழி.

alzheimer's disease : அல்ஜை மர் நோய் : மூளைத் தளர்ச்சியினால் அறிவு குழம்பி ஏற்படும் பைத்தியம்.

amalgam : உலோகப் பூச்சு; இரசக்கலவை (இரசக்கட்டு); மாழைப் பூச்சு : பாதரசமும் ஏதேனும் மற்றொரு உலோகமும் சேர்ந்த கலவை. 'பல் இரசக் கலவை' என்பது, பல் குழியை நிரப்புவதற்குப் பயன்படும் ஓர் இரசக் கலவை. இதில் பாதரசம், வெள்ளி, வெள்ளியம் (டின்) கலந்துள்ளன.

amantadine : அமன்ட்டாடின் : நோய்க்கிருமி எதிர்ப்பு மருந்து. இது நோய்க் கிருமியால் உண்டாகும் ஹாங்காங் சளிக் காய்ச்சல் (இன்ஃபுளுவென்சா), சுவாசக்கோளாறுகள் போன்றவற்றில் நோயின் காலநீட்சியைக் குறைக்கிறது.

பார்க்கின்சன் நோயில் நடுக்கத் தையும், விறைப்பையும் குறைப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

amastia : மார்பகமின்மை; முலையின்மை; முகையின்மை : பிறவி யிலேயே மார்பகங்கள் (முலை) இல்லாதிருத்தல்.

amaurosia : ஒளியின்மை; பார்வை அற்ற.

amaurosis : குருட்டுத் தன்மை; பார்வையின்மை; ஒளியின்மை : பார்வை நரம்புக் கோளாறு காரணமாக உண்டாகும் ஓரளவு அல்லது முழுமையான குருட்டுத் தன்மை.

amaurotic : குருட்டுத் தன்மை உடையர் : கண்ணின் புற உறுப்புச் சரியாக இருந்தும் அல்லது கண்ணின் புறத்தோற்றத்தினால் மாறுதல் தோன்றாதிருந்தும் முழுக் குருடாக இருப்பது.