பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

unidirectional

1123

unstable...


unidirectional : ஒருதிசைய : ஒரு திசையில் மட்டும் பாயும்.

unigravida : கருத்தரிப்பு : முதல் கருத்தரிப்பு முதன்முறை கருத் தரித்துள்ள பெண்.

unilateral : ஒரு பக்கமான; ஒரு புறம்; ஒரு பக்க : ஒரு பக்கத் தோடு மட்டும் தொடர்புடைய.

uniocular : ஒரு கண் சார்ந்த : ஒரு கண்ணோடு மட்டும் தொடர்புடைய அல்லது ஒரு கண்ணை மட்டும் பாதிக்கிற.

union : ஒன்றிணைப்பு : புண் ஆறும்முறை, காயம் ஆறும் முறை; எலும்பின் உடைந்த முளைகளுக்கிடையே ஏற்படுத் தப்படும் தொடர்பிணைப்பு.

uniovular : ஒற்றைச் சூல் முட்டை சார்ந்த; ஓரண்ட : ஒரேயொரு சூல்முட்டை தொடர்புடைய. ஒற்றை சூல் முட்டை இரட்டையர்கள் உருவ ஒற்றுமையுடன் இருப்பார்கள்.

unipara : ஒரு சேத்தாய் : ஒரு குழந்தை மட்டுமே பெற்ற பெண்.

uniparental disomy : ஒரு பெற்றவர் இருகீறு : பெற்றோர்களில் ஒருவரிடமிருந்து நிறக்கீற்றின் இருபிரதிகளைப் வழிமுறையாகப் பெறுதல்.

uniparous : ஒருபேறு : ஒரு சமயம் ஒரு குழந்தையை பெற்றெடுத்தல்.

unipotential : ஒருதிறன் : ஒரு மாதிரியான உயிரணுக்களை உருவாக்குவது போன்ற ஒரு திறனை மட்டும் பெற்றிருத்தல்.

unisex : பால்வேற்றுமையில்லா; ஒரு பாலின : வெளித் தோற்றத் தில் பால்வேற்றுமை இல்லாதிருத்தல்.

unit : அலகு : 1. ஒரு பொருள்; 2. ஒரு தொகுதியில் ஒரு தனி மம், 3. ஒரு அளவின் தர மதிப்பீடு, குறி"யூ'.

United Nations International Children's Emergency Fund UNICEF : ஐக்கிய நாடுகளின் நாடுகளுக்கிடையேயான குழந்தைகளுக்கான அவசர நிதியம் (யூனிசெஃப்) : குழந்தை உயிர்தரித்தல், நோய்தடுப்பு, வளர்ச்சிக்கான உதவித் திட்டங்களை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அமைப்புகளில் ஒன்று குழந்தை நலப்புரட்சிக்கான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது.

unsaturated : செறிவற்ற : எல்லா கரைபொருளையும், கரைப்பான் கரைசலில் வைத்திருக்காமலிருத்தல்.

unstable angina : நிலையற்ற நெஞ்சுவலி : நோயாளர்களில் நெஞ்சு வலி வேகமாக அதிகமாதல், ஒய்விலேயே தீவிர வலி அல்லது, தீவிரமான நெடுநேர