பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Weber's test

1168

weightlessness


Weber's test : செவிட்டுச் சோதனைக் கருவி : செவிட்டுத் தன் மையைக் கண்டறியப் பயன் படுத்தப்படும் ஒரு தொனி உண்டாக்கும் கவைக்கோல், சோதனை.

elbeye : கண்பூ; கண்படல நோய்.

web foot : தோலடி; காலடி : தோல் இழைம இணைப்புடன் கூடிய விரல்களுடன் சேர்ந்த கால்டி.

Webster's operation : வெப்ஸ்டர் அறுவை : அமெரிக்க மகளிர் நோய் மருத்துவர் பெயரிட்ட அறுவை (முறை)யில், பின் தள்ளிய கருப்பையை நிலை நிறுத்த, உருள்பிணையங்களை, அகல்பிணையத்தை துளைத்து உட்செலுத்தல்.

Wechsler adult intelligence scale : வெக்ஸ்லெர் ஆளர் அறிவுத்திறனளவை : அறிவுத் திறனென்பது, ஒருவரின் பயனுடன் செயல்படுவதற்கு பகுத்தறிவுடன் சிந்திக்க, சூழலுடன் பயனுள்ள முறையில் செயல்படும் முழு ஆற்றல் என்னும் அமெரிக்க மனவியலாளர் ஆல் ஃப்ரெட் வெக்ஸ்லரின் சொல் விளக்கம் பெரியவர்களின் அறிவுத்திறனளவுக்கான அடிப் படையாக பரவலாக பயன்படுகிறது.

wedge facture : ஆப்பு எலும்பு முறிவு : முன் பகுதி அமுக்கப்பட்ட, முள்ளெலும்பு முறிவு.

wedge pressure : இடை ஆப்பு அழுத்தம் : நுரையீரல் தமனியின் ஒரு கிளைக்குள் ஒரு இதய வடிகுழலை செலுத்தி நுரையீரல் தமனியின் உள்பகுதி அழுத்தத்தை அளப்பது இடது இதய மேலறை அழுத்தத்துக்கு ஈடாகும்.

wedge resection : பகுதி அறுத்தெடுத்தல் : ஒரு உறுப்பின் ஒரு பகுதியை அறுவை செய்து, வெட்டியெடுத்தல்.

Weech's formula : வீச்விதிமுறை : 2-12 வயதுள்ள குழந்தையின் உயரத்திலிருந்து பெரியவரின் உயரத்தை அனுமானிக்கும் விதிமுறை.

Week's bacillus : வீக்நீள்நுண்ணுயிர் : அமெரிக்க கண்மருத்துவர் ஜான்வீக்ஸ்.

weight : எடை : 1. ஒரு பொருளின்மீது செயல்படும் ஈர்ப்பு சக்தி, வழக்கமாக பூமியுடையது. 2. கனத்தன்மை எடைகளின் அட்டவணையைப் பார்க்கவும்.

weightlessness : எடையில்லா தன்மை : விண்வெளிவீரர்கள் ஈர்ப்பு சக்தி முழுவதுமாக இல்லாத இடங்களில் காணப்படுவது போல, ஈர்ப்பு ஆற்றல் செயல்படாத நிலை.