பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

apomorphine

137

aposita


வகை. அப்போ A-I, அப்போ A-II அளவுகள் குறைந்தாலோ அப்போ -B அளவு அதிகரித்தாலோ இதயத்தமனி நாளநோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம். அப்போ -A மிகை அடர்த்திக் கொழுப்புப் புரதத்தின் முக்கிய அங்கமாக விளங்குகிறது. அப்போ -B குறை அடர்த்திக் கொழுப்புப்புரதத்தின் முக்கியப் புரதப்பொருளாகத் திகழ்கிறது அப்போ -A கல்லீரலில் உற்பத்தியாகிறது.

apomorphine : வாந்தி மருந்து : ஊசி மூலம் செலுத்தும்போது வாந்தி வரக்கூடிய கடுமையான மருந்து. நஞ்சுண்டவர்களின் வயிற்றிலிருந்து நஞ்சை வெளிக்கொணர்வதற்கு இது பயன் படுத்தப்படுகிறது.

aponeurorrhaphy : தசைநாண்படல இணைப்பு : தசைநாண் படலத்தைத் தையல் மூலம் இணைப்பது.

aponeurosis : திசுப்பட்டை; தசைநாண்படலம்; தசைச்சவ்வு : மினு மினுப்பான, தசைத்தளை போன்ற திசுக்களின் அகன்ற பட்டை. இது தசைகளைப் போர்த்தி ஒன்றோடொன்று இணைத்துக் கொள்ள உதவுகிறது.

aponeurosis : திசுப்பட்டை வீக்கம்; தசைநாண் படல அழற்சி; தசைச் சவ்வு அழற்சி : திசுப் பட்டையின் அழற்சி.

apophysis : எலும்புப் புடைப்பு : எலும்புப் புறவளர்ச்சியுற்று நீட்டிக் கொண்டிருத்தல் அல்லது புடைத்திருத்தல்.

apophysitis : எலும்புப் புடைப்பு அழற்சி : எலும்புப் புறவளர்ச்சியுற்று அழற்சி அடைதல்.

apolectic : apoplectical : வலிப்பு நோய்க்குரிய; வலிப்பு நோய் விளைவிக்கும்; வலிப்பு நோயுள்ள; வலிப்புக்குள்ளாகும் தன்மையுடைய.

apoplexy : வலிப்புநோய் (சன்னி); உறுப்பின் உட்கசிவு நினைவிழப்பு வீழ்ச்சி; அதிர் நிகழ்வு : மூளையின் குருதிப் பெருக்கினால் பெரும் பாலும் விளைகிற உணர்ச்சி, செயல் ஆகியவற்றின் இழப்பு.

apoprotein : அப்போபுரதம் : கொழுப்புப் புரதத்தில் உள்ள புரத மூலக்கூறு.

apoptosis : அப்போப்டோசிஸ் : அணுக்களின் அழிவை நடை முறைப்படுத்துதல் அணுவின் DNA சிதைவதாலும் குரோமேட்டின் சுருங்கப்படுவதாலும் இவ்வாறு அணுக்கள் அழிக்கப்படுகின்றன.

aposita : உணவு வெறுப்பு : உணவு உண்பதில் வெறுப்பு உண்டாக்கும் நோய்.