பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

arthrocentesis

145

arthroplasty


அல்லது அதற்கு மேற்பட்ட மூட்டுகளில் ஏற்படும் வலி. இதனைக் 'கீல் வதம்' என்றும் கூறுவர். இதனால், தொட்டாலும், அசைத்தாலும் வலி அதிகமாக இருக்கும். இது பல காரணங்களால் உண்டாகிறது. அந்தக் காரணங்களுக்கேற்ப சிகிச்சை முறையும் வேறுபடுகிறது.

arthrocentesis : மூட்டு நீர்நீக்கல்; மூட்டு இடைநீர் நீக்கல்; மூட்டு இடைநீர் உறிஞ்சல் : மூட்டில் உருவாகும் திரவத்தை ஊசிக் குழல் கொண்டு உறிஞ்சி எடுக்கும் முறை.

arthrochondritis : மூட்டுக் குருத்தெலும்பு அழற்சி: எலும்பு முட்டில் உள்ள குருத்தெலும்பு அழற்சி அடைதல்.

arthroclasis : மூட்டிணைப்புக் குலைவு : மூட்டு உறுப்புகளை பலவிதங்களில் அசைப்பதற்கு உதவும் முட்டுக் குழியினுள் ஒட்டிணைவு சீர்குலைந்து போதல்.

arthrodesis : மூட்டிறுக்கம்; மூட்டு நீக்கி : அறுவை மருத்துவம் மூலமாக ஒரு மூட்டினை இறுக்க மாக்குதல்.

arthrodia : மூட்டிணைப்பு : சிறு அசைவுள்ள மூட்டிணைப்பு.

arthrodysplasia : மூட்டு ஊனம் : இது ஒரு பரம்பரை நோய். எலும்பு மூட்டுகள் சிதைவடைந்து ஊனமுற்றிருக்கும்.

arthroempyesis : சீழ்மூட்டு; சீழ்மூட்டழற்சி : எலும்பு முட்டில் சீழ் சேருதல்.

arthrography : ம்ஊட்டிணைப்புப் படம்; மூட்டு வரைவியல் : ஒரு மூட்டின் உள் கட்டமைப்பினைக் கண்டறிவதற்காக ஊடு கதிர்ப் படத்தின் மூலம் ஆராய்தல்.

arthrogryposis : மூட்டு மடக்கம்; மூட்டு முடக்கம் : ஒரு எலும்பு மூட்டு அசைய இயலாமல் முடங்கிவிடுவது.

arthrology : மூட்டு இயல் : மூட்டுகளின் கட்டமைப்பு, செயல் முறை, அவற்றில் உண்டாகும் நோய்கள், அவற்றுக்கான சிகிச்சை முறை ஆகியவை பற்றி ஆராயும் அறிவியல்.

arthroneuralgia : மூட்டு நரம்பு வலி; மூட்டு வலி : ஒரு மூட்டில் அல்லது அதனைச் சுற்றி வலி ஏற்படுதல்.

arthro-ophthalmopathy : மூட்டு-கண்நோய் : எலும்பு மற்றும் கண்களை ஒரே நேரத்தில் பாதிக்கக் கூடிய நோய்.

arthropathy : மூட்டு நோய்(சூலை); மூட்டு மெலிவு நோய் : முட்டில் ஏற்படும் ஒரு நோய். கடுமையான வயிற்றுப் போக்கினால் (பேதி) உண்டாகிறது.

arthroplasty : மூட்டு அறுவை மருத்துவம்; மூட்டுச் சீரமைப்பு :