பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Bartter's syndrome

186

Basedow's disease


பரவுகிறது. இந்த நோயின் அறிகுறிகளாவன : காய்ச்சல், இரத்த அழிவுச் சோகைநோய், தோலிலும் சீதப்படலத்திலும் பரவலாகக் கொப்புளங்கள் தோன்றுதல், குளோராம்பெனிகால் எனும் நுண்ணுயிர்க்கொல்லி மருந்து இதனைக் குணப்படுத்தக் கூடியது.

Bartter's syndrome : பார்ட்டர் நோயியம் : சிறு நீரகத்தில் வடி முடிச்சுக்கு அருகில் அமைந்துள்ள அணுக்கள் பெருக்கமடைதல், பொட்டாசியம் குறைபாடு, காரத் தேக்கம், ஆல்டோஸ்டீரோன் மிகைப்பு, மிகை இரத்த அழுத்தமில்லா நிலை ஆகிய அறிகுறிகள் அடங்கிய நோயியம். 'பிரெ டெரிக் பார்ட்டர்' எனும் அமெரிக்க மருத்துவர் இதனை முதன்முதலில் இனம் கண்டறிந்தார். எனவே, இந்த நோயியம் அவர் பெயரால் அழைக்கப்படுகிறது.

baruria : மிகை அடர்வுச் சிறுநீர் : சிறுநீரின் ஒப்படர்வு மிகைப்படுதல். மிகை அடர்வுள்ள சிறுநீர் கழித்தல்.

baryglossia : குறைவேக நாக்கு இயக்கம்; குறைவேக நாவியக்கம் : பேச்சில் வேகக்குறைவு.

barylatia : தடித்த சொல் பேச்சு : தெளிவில்லாத, தடித்த பேச்சு. பேச்சுறுப்புகள் சரியாக இணைந்து செயல்படாத்தால் ஏற்படும் நிலைமை.

basal anesthesia : அடிப்படை உணர்வகற்றல்.

basal carcinoma : தரச செல்புற்று.

basal ganglia : பெர்உ மூளை உயிரணுக்கள்; அடிமூளை முடிச்சு; அடிமூளைத் திரள்; தளமுடிச்சுக்கள் : தன்னியக்கத் தசைகளை ஒருங்கு இணைக்கும் பெருமூளைப் பகுதியில் உள்ள பழுப்புநிற உயிரணுக்கள். இந்தப் பகுதி சிதைவுறுவதால் பார்க்கின்சன் நோய் உண்டாகிறது.

basal metabolism : அடித்தள ஆக்கச் சிதைவு.

basal narcosis : உறக்கம் தூண்டும் மருந்து; அடிப்படைகள் மயக்கி; முன்னோடி மயக்கம் : அறுவைச் சிகிச்சைக்கு முன்பு மயக்க மருந்து கொடுப்பதற்கு முன்னர், அச்சத்தையும் பீதியையும் குறைத்து, உறக்கம் உண்டாக்குவதற்காகக் கொடுக்கப்படும் மயக்க மருந்துகள். இது அறுவைச் சிகிச்சைக்குப் பிந்திய அதிர்ச்சியைக் குறைக்கிறது.

base : ஆதாரப் பொருள்; அடித் தளம்; மூலச்சேர்மம்; தளம் : 1. ஒரு கூட்டுப் பொருளின் முக்கியப் பகுதி 2. ஒர் அமிலத்துடன் இணைந்து ஒர் உப்பாக மாறும் ஒரு வேதியியற்பொருள்.

Basedow's disease : பெசிடோ நோய் : கண்விழிப் பிதுக்கக் கேடயச் சுரப்பிக் கழலை, 'ஜெர்மன்