பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bence jones protein

193

benzathine penicillin


bence jones protein : பென்ஸ்-ஜோன்ஸ் புரதம் : எலும்பு மச்சை அழற்சியுடைய நோயாளிகள் சிலரின் சிறுநீரில் காணப்படும் புரதங்கள். இவர்களின் சிறுநீரைச் சூடாக்கும்போது, 50'c-60'c வெப்பநிலையில், இந்தப் புரதங்கள் வீழ்படிவாகி மேலும் கொதி நிலைக்குச் சூடாக்கும்போது மீண்டும் கரைந்துவிடும். மறுபடியும் குளிர்விக்கும்போது மீண்டும் வீழ்படிவாகும்.

bendrofluazide : பெண்ட்ரோஃபுளுசைடு : தையாசைட் குழுமத்தைச் சேர்ந்த சிறுநீர்க் கழிவினைத் தூண்டும் மருந்து. இது வாய்வழி உட்கொள்ளப் படுகிறது. இது சிறுநீரகக் குழாய்களில் சோடியம் குளோரைடு மீண்டும் ஈர்க்கப்படுவதைக் குறைக்கிறது. இது செயற்படும் கால அளவு 20-24 மணிநேரம். கல்லீரல் அல்லது சிறுநீரகம் செயலிழக்கும்போது இது பயன்படுத்தப்படுகிற்து.

benemid : பெனிமிட் : புரோபினெசிட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

benign : ஏதமில் நோய்; தீங்கற்ற; வலியற்ற; ஆறக்கூடிய; தீதிலா : நோய் வகையில் கடுமையாக இராத பெருந்தீங்கு விளைவிக்காத நோய்.

benign tertain fever : தீதிலா மூன்றாம் நாள் காய்ச்சல்.

Bennett's fracture : பென்னெட் எலும்பு முறிவு : உள்ளங்கை எலும்புகளின் மூட்டுப்பகுதிகளின், உடலின் மையம் நோக்கிய முனைகளில் ஏற்படும் முறிவு.

Benoral : பெனோரால் : பெனோரிலேட் என்னும் மருந்தின் வணிகப் பெயர்.

benorylate : பெனோரிலேட் : ஆஸ்பிரின், பாராசிட்ட மோல் இரண்டும் கலந்த ஒரு வேதியியல் கூட்டுப்பொருள்; இது வீக்கத்தைக் குறைக்கக் கூடியது. நோவகற்றத் தக்கது; காய்ச்சல் வராமல் தடுக்கக்கூடியது; நெடிது செயற்படக்கூடியது. இது உள் இரத்தப்போக்கு ஏற்படாமல் தடுக்கத்தக்கது.

bentonite : பென்டோநைட் : நீரேற்றம் செய்யப்பட்ட அலுமினியம் சிலிகேட் வேதிப்பொருள்.

benzalkonium : பென்சால் கோனியம் : நோய்க்கிருமிகளைத் தடுக்கும் மருந்து. துப்பரவு செய்யும் தன்மையுடையது. தோலுக்காக இதன் 1% கரைசல் (1:20000) பயன்படுத்தப்படுகிறது. காயங்களைத் துப்பரவு செய்ய 1:40000 கரைசல் பயன்படுகிறது.

benzathine penicillin : பென்சாத்தின் பென்சிலின் : இது நோய்க் கிருமிகளைத் தடுக்கும் மருந்து. இதனை வாய்வழியாகவோ, ஊசி மூலமாகவோ