பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bilobate

200

bioavailability


bilobate : ஈரிதழ் உறுப்பு : இரு மடல்கள் கொண்ட உறுப்பு.

bilobular : இருமடல் உறுப்பு : இரு சிறிய இதழ்கள் அல்லது மடல்கள் கொண்ட உறுப்பு.

biluria : பித்த நீரிழிவு.

bimanual : இருகைச் சோதனை : இருகைகளாலும் செய்யப்படும் செயல்முறை. பெண் நோயியலில், அடிவயிற்றில் ஒருகையை வைத்தும், இன்னொரு கையை யோனிக் குழாயினுள் நுழைத்தும் உள் பிறப்புறுப்புகளைச் சோதனை செய்யும் முறை.

binary : இரட்டை; இரண்டிரண்டாக : சமஅளவுள்ள இரு பகுதிகள், இரண்டு கிளைகள்.

Binary fission : இரட்டைப்பிளவு; இரட்டைப் பிளப்பு : உடல்அணுக்கள் அல்லது அணுக்களில் உள்ள உட்கருக்கள் இரு சம பாகங்களாகப் பிரிதல்.

binaural : இருசெவி சார்ந்த; இரு செவிக்குரிய; இரு செவி : இரு செவிகளையும் பயன்படுத்துகிற இதயத் துடிப்புமானி போன்ற வகையைச் சார்ந்த கருவி.

binder : அடிவயிற்றுக் கட்டு : மகப்பேற்றுக்குப் பின்பு அடிவயிறு கருங்குவதற்காக வெளிப்புறமாக அழுத்தம் கொடுப்பதற்காகப் போடப்படும் துணிப்பட்டைக்கட்டு.

Binet's test : பைனட் சோதனை : ஒருவரின் அறிவுத்திறனை அவரது மன வயதுக்கேற்ப கணித்தறியும் சோதனை. இது முதலில் 1905 இல் பயன்படுத்தப்பட்டது. அறிவுத்திறன் அளவெண் (IQ) சோதனைக்கு இது முன்னோடி.

binocular vision : தொலை நோக்காடிப் பார்வை; இருவிழிப் பார்வை :ஒரே சமயத்தில் ஒரு பொருளின் ஒரு பிம்பம் மட்டுமே கண்ணுக்குப் புலனாகும் வகையில் இருகண்களின் பார்வையினையும் அந்தப் பொருளின் மீது ஒரு முகப்படுத்துதல். இது பிறவிலேயே அமைந்த திறம்பாடு அன்று. வாழ்க்கையின் முதல் சில மாதங்களில் இத்திறன் உருவாகிறது.

binocular : தனியணு இரட்டையர் : புது உயிராக உருவாகும் பெண் கரு உயிரணுக்களின் இரு தனி உயிரணுக்களிலிருந்து உருவான இரட்டைப் பிள்ளைகள். இந்த இரட்டையர் வெவ்வேறு பாலினம் சார்ந்தவராக இருக்கலாம்.

bioassay : உயிரியல் மருத்துவ ஆய்வு : உயிருள்ள விலங்கின் உடலில் அல்லது அதன் உடலில் குறிப்பிட்ட உறுப்பில் ஒரு மருந்தின் விளைவை, வீரியத்தை, பயனை, பாதிப்பைக் கண்டறியும் முறை.

bioavailability : உடலின் மருந்து இருப்பு : ஒர் இலக்கு உறுப்பில்