பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

biotics

204

bisexual


அறிவினைப் பயன்படுத்துவதும், உயிரியல் ஆய்வில் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்துவதும் உயிர்த் தொழில் நுட்பம் எனப்படும்.

biotics : உயிர் : உயிர் தொடர்பான அறிவியல்.

biotin : ஊட்டச்சத்து : பி-இரண்டு (B-2) எனப்படும் ஊட்டச்சத்துக் கலவைக் கூட்டில் அடங்கியுள்ள "வைட்டமின் H" எனப்படும் ஊட்டச்சத்துக் கூறு. இந்த ஊட்டச்சத்துக் குறைபாட்டினால், தோல் அழற்சி நோய் உண்டாகும்.

biotoxin : உயிர்நச்சு : உயிருள்ள திசுக்களில் உற்பத்தியாகும் நச்சுப்பொருள்.

biotransformation : உடல் மருந்து மாற்றம்; உயிரியக்க வேதியியல்; உயிரிய மாற்றம்.

biotype : ஓரினக் கூட்டம்.

biparous : இரட்டை ஈற்று : ஒரே தடவையில் இரட்டையாகப் பெறுதல்.

biperiden : பைபெரிடன் : தனியங்கும் நரம்பு மண்டலத்தின் மீது செயற்படும் ஒருவகை மருந்து. பார்க்கின்சன் நோய்க்கு இது பயன்படுகிறது.

Bipp : எலும்பழற்சிக் கட்டு மருந்து : பிஸ்மத் (நிமிளை) சப்னுட்ரேட் அயோடாஃபார்ம், திரவ பாரஃபின் கலந்தஒரு குழம்பு. கடுமையான எலும்பழற்சியில் நோய்க்கிருமித் தடைக்காகக் கட்டுப்போடுவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது.

birth : பிறத்தல்; பிறப்பு : தாயின் உடலிலிருந்து குழந்தை பிறக்கும் செயல். தாய்க்கு இடுப்பு வலி காணும்போது குழந்தை தாயின் இடுப்பெலும்பு உட்குழிவின் வழியாக வெளியே வருகிறது.

birth control : கருத்தடை; பேற்றுக் கட்டுப்பாடு.

birth-mark : பிறவிக்குறி : பிறக்கும்போது உடலில் காணப்படும் தனிப்பட்ட அடையாளம்.

birth rate : பிறப்பு விதம்.

bisacodyl : பிசாக்கோடில் : ஒரு செயற்கைப் பேதி மருந்து. இதனை வாய்வழி உட்கொள்ளும்போது, ஈர்த்துக்கொள்ளப் படுவதில்லை. ஆனால், இரைப்பையின் உட்சுவரைச் செயலாற்றத் தூண்டுகிறது. இது மலக்குடல் சிறுநீர்த் துளையினுள் நுழைத்து அங்கேயே கரைய விட்டுவிடப்படும் குளி கைகளாகவும் கிடைக்கிறது.

bisexual : இருபால் கூறினம்; இருபாலிய இருபாலினம் : இருபால் உறுப்புகளையும் ஒருங்கேயுடைய உயிரினம்.