பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bleeding time

208

blindgut


மறை குருதி தெரியா குருதி : சிறு குடலிலிருந்து வெளிப்படும் குருதி மறைந்த நிலையில் இருக்கும்; கண்ணுக்குத் தெரியாது நுண்ஊக்கியில் காண இயலும்.

bleeding time : குருதிக் கசிவு நேரம்; குருதியொழுக்கு நேரம் : தோல் காயத்திலிருந்து இரத்தம் வெளியேறுவது தானாகவே நின்று விடுவதற்கு ஆகும் நேரம். இது ஒரு மருத்துவச் சோதனையுமாகும்.

blennorrhagia : மேக நோய்; குய்யக் கசிவு : பெண்ணின் கருப்பை வாய்க் குழாயிலிருந்து அல்லது ஆணின் சிறுநீர் ஒழுக்குக் குழாயிலிருந்து சளிச்சவ்வு (சிலேட்டுமப் படலம்) பெருமளவில் வெளியேறுதல்.

blennorrhoea : சீதச் சிறுநீர்; புணர் புழைச் சீதநீர் : வெட்டை நோயுள்ள அணுக்குச் சிறுநீரில் சீழ் கலந்து வரும் நிலைமை. வெட்டை நோயுள்ள பெண்ணுக்குப் புணர்புழைத் திரவத்திலும் சிறுநீரிலும் சீழ் கலந்து வரும் நிலைமை.

bleomycin : பிளியோமைசின் : உயிர் வாழ்வுக்கு ஊறு செய்யும் ஒரு பொருள்.

blepharon : இமை.

blepharitis : இமைவீக்கம்; இமை அழற்சி : முக்கியமாகக் கண் விழிம்புகள் வீக்கமடைதல்; இமை மயிர்க்கால் நோய்.

blepharon : கண்ணிமை.

blepharoptosis : இமை வாதம் : தசையின் பக்கவாதத்தினால் கண்ணின் மேலிமை கீழ் நோக்கித் தொங்குதல்.

blepharospasm : இமை இசிப்பு; இமைச்சுருக்கம் : கண்ணிமைகையில் தசைச் கரிப்பு ஏற்பட்டு, கண்ணிமை அளவுக்கு அதிகமாகத் துடித்தல்.

blepheroplasty : இமை சீரமைப்பு : இமைச் சுருக்கங்களை அல்லது இமை பாதிப்புகளை அறுவை மருத்துவம் முலம் சீரமைத்தல்.

blepharotomy : இமை வெட்டு; கண்ணிமைவெட்டு : அறுவைக் கத்தியின் உதவி கொண்டு கண்ணிமையைக் கிழித்தல்.

blighted ovum : வளரா முட்டை : கருத்தரித்த சினைமுட்டை தொடர்ந்து வளர இயலாத நிலைமையில் இருத்தல்.

blind : குருடர்; பார்வையற்றவர்; பார்வை உணர்வின்மை : மருந் தில் உள்ள ஆக்கக் கூறுகளை அறியாதிருத்தல்.

குருட்டுப்பொட்டு : விழித்திரை யில் ஒளி உணர இயலாத பகுதி.

blindgut : குடல்வால் குடல்முளை.