பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bronchogenic

227

bronchopleural


bronchogenic : மூச்சுக்குழாய் சார்ந்த; மூச்சுக்குழல் தொடர்பு உள்ள; மூச்சுக்குழல் நுரையீரல் புற்றுநோய் : மூச்சுக் குழலிலிருந்து துவங்கும் புற்றுநோய். இது சிற்றணுவகைப் புற்று நோய், சிற்றணு இல்லாத வகைப் புற்றுநோய், ஸ்குவாமஸ் அணுவகைப் புற்றுநோய், அடினோ அணுவகைப் புற்று நோய், சிதைந்த வகைப் புற்று நோய் என வகைப்படுத்தப்பட்டு உள்ளது. நுரையீரல் புற்று நோய்க் கழலைகள் மூச்சுக் குழல்கணுக் குழியை ஒட்டியோ, நுரையீரல் உறைக்கு அருகிலோ அல்லது மேற்கூறிய இரண்டிற்கும் மத்தியிலோ அமையலாம்.

bronchogram : நிறமற்ற மூச்சுக் குழல் ஊடுகதிர்ப்படம் : மூச்சுக் குழலில் கதிர்புகா சாயப் பொருளைச் செலுத்தி எடுத்த ஊடுகதிர்ப் படம்.

bronchography : மூச்சுக்குழாய் வரைபடம்; நிறமேற்ற நுரையீரல் கதிர்ப்படம் : ஒரு சிறிதளவு திரவத்தைச் செலுத்தி மூச்சுக் குழாய்களின் பிரிவுளை ஊடு கதிர்மூலம் வரைபடம் எடுத்தல்.

broncholith : மூச்சுக்குழல் கல்; சுவாசக் குழல் கல் : சுவாசப் பாதையில் காணப்படும் சுண்ணாம் பேற்ற பொருள்.

broncholithiasis : மூச்சுக்குழல் கல்லேற்றம்; சுவாசக் குழல் கல் லேற்றம் : மூச்சுப் பாதையில் கல்போன்று தோற்றமளிக்கும் சுண்ணாம்பேற்ற பொருள்கள் காணப்படுதல். மூச்சுப்பாதையில் இருக்கும் சுண்ணாம்பேற்ற நிணநீர் முடிச்சுகள் மூச்சுக் குழாயை அமுக்குதல் அல்லது அழுத்துதல்.

bronchology : மூச்சுக்குழாய் மருத்துவவியல்; சுவாசக் குழல் மருத்துவவியல் : மூச்சுப் பாதையில் உள்ள உறுப்புகள், அவற்றில் உண்டாகும் நோய்கள் மற்றும் அவற்றுக்குரிய தீர்வுகள் குறித்த படிப்பு.

bronchomalacia : மூச்சுக்குழாய் நலிவு ; சுவாசக் குழல் நலிவு : மூச்சுப்பெருங்குழல் அல்லது மூச்சுச்சிறுகுழல் சுவர்கள் நலிவடைதல்.

bronchomycosis : நுரையீரல் நோய் : மூச்சுக் குழாய்களையும், நுரையீரல்களையும் பாதிக்கும் பலவகைக் காளான் சார்ந்த நோய்கள்.

bronchophony : மூச்சுக்குழாய் ஒலி; சுவாச ஒலி; சுவாசக்குழல் ஒலி : சுவாசத்தின்போது சுவாசப் பைகளில் உண்டாகும் ஒலி. மார்பு ஒலிமானி (ஸ்டெத் தாஸ்கோப்) மூலம் சுவாச ஒலிகளைக் கேட்டல்.

bronchopleural : மூச்சுக்குழாய் நுரையீரல் சவ்வு : மூச்சுக் குழலையும் நுரையீரல் உறையை யும் சார்ந்த,