பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Calot's triangle

243

camphor


Calot's triangle : காலோட் முக்கோணம் : திசுப்பைத் தமனியில் மேற்புறத்திலும், திசுப்பை நாளத்தில் கீழ்ப்புறத்திலும், கல்லீரல் நாளத்தில் நடுப்பகுதியிலும் உருவாகும் ஒரு முக்கோணம். இது பித்தப்பை அறுவை மருத்துவத்தில் ஒர் ஆபத்தான பகுதியாகும். ஃபிரெஞ்சு அறுவை மருத்துவ வல்லுநர் ஜீன்-ஃபிரான்ஸ் காலோட் பெயரால் அழைக்கப்படுகிறது.

calvaria : மண்டைத் தூபி : மண்டையோட்டின் மேற்பகுதியில் உள்ள தூபி போன்ற பகுதி. இதில், நெற்றி, உச்சி, பின்புற எலும்புகள் அடங்கி யுள்ளன. இதனைத் தலையுச்சி வட்டம் மூடியிருக்கும்.

calvarium : மண்டை ஓடு.

Calve-Perthes disease : கால்வே-பெர்த்தஸ் நோய் : துடை எலும்பின் தலைப் பகுதியின் எலும்பு முனையில் ஏற்படும் நச்சு நுண்மமில்லாத திசு நசிவு. ஃபிரெஞ்சு எலும்பு மருத்துவ அறிஞர் ஜார்ஜ் பெர்த்தெஸ், ஜெர்மன் அறுவை மருத்துவ அறிஞர் பெர்த்தஸ் பெயரால் அழைக்கப்படுகிறது.

calymmatobacterium : திசுக் கட்டி நோய்க் கிருமி : அரை சார்ந்த திசுக்கட்டியை உண்டாக்கும் கிராம-எதிர்படி நோய்க் கிருமி.

calyptrogen : வேர் முடியை உருவாக்கும் உயிர்மத் தொகுதி.

calyx : குவளைக்குழி : 1. குவளை போன்ற அமைப்புடைய உறுப்பு அல்லது குழிவு. 2. சிறுநீரகக் கூம்பின் காம்பு உறுப்பினை மூடியிருக்கும் சிறுநீரக இடுப்புக் கூட்டின் குவளைபோன்ற நீட்சி.

camcolit : காம்கோலிட் : லிதியம் கார்போனேட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

camel back curve : ஒட்ட்க முதுகு வளைவு : மேகவெட்டை நோய், தட்டம்மை, உள்ளுறுப்பு நோய் ஆகியவற்றில் காணப்படும் இரட்டை நாள் முறைக் காய்ச்சல் கூர்முனை வளைவு.

CAMP : சி.ஏ.எம்.பி (CAMP) :' சுழற்சி அடினோசின் மானோ ஃபாஸ்பேட் (Cyclic Adenosine Mono-phosphat) என்பதன் சுருக்கம்.

Campbell de Morgan spots : கேம்பல்-டெ-மார்கன் புள்ளிகள் : தோல் விரிவடையும்போது வெளிறாதிருக்கிற 'ராஸ் பெரி' பழச்சிவப்பு நிறத்தைக் கொண்ட புள்ளிகள். ஆங்கில அறுவை மருத்துவ வல்லுநர் கேம்பல்-டி-மார்கன் பெயரால் அழைக்கப் படுகிறது.

camphor : கற்பூரம் (சூடம்) : வயிற்று உப்புசம் அகற்றும் மருந்தாகப் பயன்படுகிறது.