பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

capsicum

248

carbenoxolone


ஆகியவற்றுடன் சேர்ந்து குறுக்குத் தடையாக அமையும்.

capsicum : செம்மிளகு : வெப்பு மிளகை உள்ளடக்கிய விதை உறையுடைய செடியில் விளையும் செம்மிளகு,

capsid : கேப்சிட் புரதம் : கேப்சோமர்ஸ் எனப்படும் புரத உட்பிரிவுகள் அடங்கிய நோய்க் கிருமியை முடியுள்ள புரதம்.

capsomer : கேப்சோமர் : ஒரு நோய்க் கிருமியின் கேம்சிட் புரதத்தின் ஒரு புரதமாக அமைந்துள்ள ஒரு குறுகிய நாடா போன்ற புரதம்.

capsula capsulae : கவச உறை : ஒர் உறுப்பினை அல்லது கட்ட மைப்பினை சுற்றியுள்ள பொதியுறை, ஒரு பொதி கூடு.

'capsule : பொதியுறை : 1. கவச உறை, 2. ஊன் பசையினாலான ஒரு தனிப்பொதியுறை, 3 சிறு நீரகங்களுக்கான உருண்டை வடிவப் பொதிகூடு. 4. இரட்டை முட்டில் இரு முனைகளையும் முடியுள்ள சட்டைக்கை போன்ற சவ்வு.

carapres : காராப்பிரஸ் : குளோனிடின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

carbachol : கார்பக்கோல் : துணைப்பிரிவு நரம்பு மண்டலத்தைச் செயற்படத் தூண்டும் மருந்து. அசிட்டில்கோலிங் போன்றது. எனினும் வாய்வழி கொடுத்தால் செயலூக்கம் உடையது. ஊசி வழி செலுத்தினால் நிலையான செயற்பாடுடையது. அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு சிறுநீரை நிலைப்படுத்து வதற்கும் குடல் நலிவின் போதும், கண்விழி விறைப்பு நோயின்போது கண்சொட்டு மருந்தாகவும் பயன்படுத்தப் படுகிறது.

carbamazepine : கார்பாமா செப்பின் : வலிப்பு நீக்கும் மருந்து. நோவையும் அகற்றுகிறது. இயக்கம், உணர்ச்சி, சுவை மூன்றையும் தூண்டும் முத்திற மண்டை உணர்வு நரம்புக்கோளாறுக்கும் பயன்படுகிறது.

carbamino haemoglobin : கார்பாமினோ ஹேமோகுளோபின் : கார்பன்டையாக்சைடுக்கும், இரத்தத்திலுள்ள குருதி உருண்டைப் புரதத்திற்கும் (ஹேமோகுளோபின்) இடையிலுள்ள கூட்டுப் பொருள்.

carbaryl : கார்பாரில் : தலைப்பேனுக்குப் பயன்படும் மருந்து.

carbenoxolone : கார்பெனோக் சோலோன் : அடிவயிற்று நோய்களைக் குணப்படுத்தும் மருந்து. ஆனால், சிறுகுடல் புண்களை இது ஆற்றாது.