பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

centrilobular

270

cephalocele


centrilobular : மைய நுண்ண : ஒரு நுண்ணறையின் மையம்.

centriole : மையக்கழியிழை : விந்தணுக்கசையணுக்கள், உயிர்மக் கதிர்கள் போன்ற ஒரு சில இழைமக் கட்டமைப்புகளில் உள்ள நுண் குழாய்க்ளின் மீச்சேர்ம இணைவுகளின் மையமாக அமைந்துள்ள, விலங்கு உயிர் அணுக்களிலுள்ள கழி போன்ற அமைப்பு. இது ஒர் உயிரணுவின் மையத்தில் காணப்படும். இது பிளவியக்கத்துக்கு முன்னதாக இரு குழவிக்கழியிழைகளாகப் பிளவுபட்டு, பிளவியக்கத்தின்போது எதிர் துருவங்களுக்குச் சென்றுவிடுகிறது.

centripetal : குவிமையப் போக்குடைய; மையநோக்கு அசைவு; மையம் நாடு; நடு ஒன்றிய : மையத்தை நோக்கிச் செல்லும் போக்குடைய நோய். சின்னம் மை (தட்டம்மை) நோய்க் கொப்புளம் இத்தகைய தன்மை உடையது.

centromere : மையப்புள்ளி : ஒரு இனக்கீற்றின் இடுக்குப்பகுதி. இது ஒரு இனக்கீற்றின் இரு கூறுகளை இணைக்கும் புள்ளி.

centrosome : மையக்கீற்று : ஓர் உயிரணுவின் திசுப்பாய்மத்தின் ஒரு பகுதி. இது, மையக்கழியிழைகளைக் கொண்ட கருமையத்தின் அருகே அமைந்துள்ளது.

centrosphere : மையமண்டலம் : மையக்கீற்றின் திகப் பாய்மம்.

centyl : சென்டில் : பெண்ட்ரோ ஃபுளுவாசைட் என்னும் மருந் தின் வணிகப் பெயர்.

cephalalgia : மண்டைக்குத்தல் : தலைவலி தலையில் ஏற்படும் வலி; மண்டையிடி.

cephalalgic : மண்டைக்குத்தலுக் குரிய.

cephalate : தலையையுடைய.

cephalexin : செஃபாலக்சின் : சிறுநீர்க் கோளாறுகளுக்கு வாய்வழி கொடுக்கப்படும் செஃபாலோரிடின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

cephalhaematoma : மண்டைத்தோல் குருதிச் சேகரம்; மண்டைக் குருதிக் கட்டி : உச்சி வட்டக் குடுமித்தோலின் எலும்படிச் சவ்வுகளில் இரத்தம் சேகரமாதல்.

cephalic : தலைநோய் மருந்து; தலைப்பாகம்.

cephalic index : தலைத்தகவளவு : மண்டையோட்டின் நீளத்துக்கும் அகலத்துக்கும் இடையேயுள்ள விழுக்காட்டுத்தகவளவு.

cephalitis : மூளை அழற்சி.

cephalocele : மூளைப் புடைப்பு முறிவு : மூளையின் பகுதியில் ஏற்படும் மூளைப் புடைப்பினை