பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cholecystotomy

289

cholera


cholecystotomy : பித்தப்பை அறுவை; பித்தப்பை திறப்பு : பித்தநீர்ப்பையில் சிறுதுண்டு அறுத்தெடுத்தல்.

choleystogastrostomy : பித்தப்பை நாளநீக்கம் : பித்த நீர்ப்பைக்கும் இரைப்பைக்கும் இடையிலான குருநாளப் பிணைப்பினை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல்.

cholecystogram : பித்தப்பை ஊடுகதிர்ப்படம் : பித்தநீர்ப்பை ஊடுகதிர்ச்சோதனை மூலம் பெறப்படும் பித்தநீர்ப்பை ஊடு கதிர்ப்படம்.

choledocholithotomy : பித்தக்கல் அறுவைச் சிகிச்சை : பொதுவான பித்தநீர் நாளத்திலுள்ள கல் போன்ற பொருளை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல்.

choledochostomy : பித்தநீர் வடிப்பு : பொதுவான பித்தநீர் நாளத்திலிருந்து ஒரு 'T' குழாய் மூலம் பித்தநீரை வடித்தெடுத்தல். கல்போன்ற பொருள் இருக்கிறதா என்று பரிசோதனை செய்த பிறகு இவ்வாறு செய்யப்படுகிறது.

choledochotomy : பித்தநீர் நாள அறுவை : பொதுவான பித்தநீர் நாளத்தில் அறுவை செய்தல்.

choledyl : கோலடில் : கோலின்தியோஃபிலினேட்டு என்ற மருந்தின் வணிகப் பெயர்.

cholelithiasis : பித்த கற்கள் : பித்தநீர்ப்பையில் அல்லது பித்த நாளங்களில் கல்போன்ற பொருள்கள் இருத்தல்.

cholelithotomy : பித்தநீர்க் குழாய் பிளவுறுத்தம் : பித்தநீர்ப் பைகளில் கற்களை அகற்று வதற்காக பித்தநீர்க்குழாய் வழியே அறுவைச் சிகிச்சை மூலம் பிளவுறுத்தல்.

cholaemia : குருதிப்பித்தநீர் நோய் : குருதியில் பித்தநீர் அல்லது பித்த நீர்நிறமி இருத்தல்.

choler : பித்தநீர்.

cholera : வாந்திபேதி (காலரா : கொள்ளைநோயாகப் பரவும் ஒரு கொடிய தொற்று நோய், கிழக்கு நாடுகளில் மிகுதியாகக் காணப்படுகிறது. இந் நோய் கண்டவர்களுக்கு அபரிமிதமாக தண்ணீர் கலந்த மலங்கழியும்;