பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

chromatin

296

chromium


chromatin : குரோமாட்டின் : டி.என்.ஏ, புரதம் ஆகியவை அடங்கியுள்ள உயிரணுக்களினுள் உள்ள பொருள்.

chromatogram : நிற ஆய்வுப் பதிவு : நிற வரைவு நிறங்கள் பற்றிய ஆய்வின் முடிவுகளைப் பதிவு செய்தல்.

chromatography : மூலக்கூறு பகுப்பு : சிக்கலான மூலக் கூறுகளின் கலவைகளிலிருந்து மூலக்கூறுகளைத் தனித்தனியே பிரித்தெடுக்கும் ஆய்வுக்கூட உத்தி. இது இயலிர்ப்பாற்றல் மூலம் சேர்மாற்றங்களைப் பிரிக்கும் முறையைப் பயன் படுத்துகிறது.

chromatolysis : பச்சயப் பகுப்பாய்வு : பச்சையப் பொருள்களிலுள்ள குருணைகளை சிதைத்தெடுத்தல். ஒரு நியூரானிலுள்ள நிசால் பகுதிகள் இதற்கு எடுத்துக்காட்டு. இதன் வெளிப்புறச் செயல்முறை உயிரணு காலியாவதால் அல்லது சேதம் அடைவதால் உண்டாகிறது.

chromatophore : நிறவேதியியல் அணுக்கள் : 1. நிறமி உயிரணு எதுவும். 2. நிறத்தை உண்டாக்கும் உயிருள்ள உயிரணு, 3, ஒரு வேதியியல் கூட்டுப்பொருளிலுள்ள அதன் நிறத்துக்குக் காரணமான அணுக்களின் குழுமம்.

chromatopsia : வண்ணக்காமாலை : இது ஒரு வகைக் கண் நோய். இந்த நோய் உள்ளவர்களுக்கு நிறமற்ற பொருள்கள் கூட வண்ணச் சாயலுடன் தெரியும். மேலும் பொருள் நிறம் மாறிக் காட்சி தரும்.

chromatoptometry : நிறம் உணர் திறன் அளவீடு : வண்ணம் உணர்திறனை அளவிடுதல்.

chromaturia : சிறுநீர் நிறத்திரிபு : சிறுநீர் இயல்பு மீறி நிறத்திரி படைதல்.

chromblastomy cosis : ஒட்டுயிர்ப் பூசண நோய் : தோலிலும், தோலடியிலும் உள்ள திசுக்களில் ஒரு பகுதிக்குள் காணப்படும் கடுமையான ஒட்டுயிர்க் காளான் நோய். இதனால், காலிபிளவர் தோற்றத்துடன் கரடுமுரடான நசிவுப் புண்கள் உண்டாகும்.

chromic acid : குரோமிக் அமிலம் : குரோமியமாக்கிய நரம்பிழையில் உறை பொருளாகப் பயன்படுத்தப்படும் 5% கரைசல். அதிக அடர்த்தி வாய்ந்த கரைசல்கள் கடுங் காரத்தன்மை வாய்ந்தவை.

chromium : குரோமியம் : வேதியியல் தனிமம். அணுஎண் 24 உடையது. உணவுச்சிற்றளவு தனிமங்களில் இன்றியமையாத ஒன்று.