பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

contraindication

333

convulsion therapy


contraindication : சிகிச்சை நிறுத்த அறிகுறி; முரண்பட்ட; அறிகுறி; கூடாப்பயன்; பொருந்தாமை; கூடாமை : ஒரு நோய்க்குரிய ஒருவகைச் சிகிச்சை முறையை நிறுத்திவிடலாம் அல்லது தவிர்த்துவிடலாம் என்பதைக் காட்டும் அறிகுறி.

contrecoup : எதிரீட்டக் காயம்; எதிர்க்காயம் : தாக்கம் ஏற்பட்ட இடத்திற்கு நேர் எதிரான இடத்தில் தாக்குவிசை காரணமாக உண்டாகும் காயம் அல்லது சேதம். ஒரு திரவத்தை கொண்டிருக்கிற மண்டையோடு போன்ற உறுப்பில் இது ஏற்படும்.

contrusion : சேர்க்கைப் பல் : 1. பல் வளைவின் இயல்புமீறிய/ வரிசை. 2. பற்கள் ஒரே கூட்டமாகச் சேர்ந்திருத்தல்.

contusion : சிராய்ப்பு : தோலில் கிழிசல் ஏற்படாமல் ஏற்பட்டு உள்ள சிராய்ப்புக் காயம்.

conus : 1. ஒரு கூம்பு அல்லது கூம்பு வடிவக் கட்டமைப்பு. 2. ஒரு கிட்டப்பார்வைக் கண்ணின் பின்பக்கக் கருவிழிப் பிதுக்கம்.

convalescence : உடல்நலம் தேறும் காலம்; உடல்நல மீட்டாக்கம் : ஒரு நோய், அறுவைச் சிகிச்சை அல்லது காயம் குணமாகியபின் படிப்படியாக உடல்தேறி நலம் பெறும் நிலை.

convales cent : உடல்நலம் தேறுபவர் : 1. நோய் நீங்கி உடல் நலம் மீளப்பெற்று வருபவர். 2. நோய் நீங்கி நலம் பெறுகின்ற.

convection : உகைப்பியக்கம்; வாகித்தல்; சுற்றுமுறை : வெப்ப மின்னாற்றல்கள் தம்மால் இயக்கப்படும் அணுக்களின் இயக்கத்தினால் பரவுதல். காற்று அல்லது திரவத்தில் சூடான பகுதியிலிருந்து குளிர்ந்த பகுதிக்கு வெப்பம் பரவுதல்.

conversion : நிலைமாற்றம்; மாற்றம் : உளவியல் போராட்டம், உடலியல் அறிகுறிகளாக வெளிப்படுதல்.

convolutions : மூளை மடிப்புகள்; மடி-மடிப்பான; வளை சுற்று; சுருட்டை; சுருள் மடிப்பு : மூளை மேற்பரப்பிலுள்ள நெளிவு மடிப்புகள்.

convulsions : வலிப்பு; இசிவு : மட்டுமீறிய முளைத்துண்டுதல் காரணமாக ஏற்படும் தசைகள் தானாகவே சுருங்குதல்.

convulsion therapy : அதிர்ச்சி மருத்துவம் : மன நோயாளிகளுக்கு மருந்து அல்லது மின் விசை மூலம் திடீரென உணர்வற்ற நிலையை உண்டாக்கி மனநோய்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவமுறை. முக்கியமாகப் பித்துநிலைச் சோர்வு, முரண்