பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

electromyography

417

element


குளோரைடு, பொட்டாசியம் அயனிகள் போன்ற பொருள்கள் மின் பகுப்பான்களாகப் பயன் படுகின்றன.

electromyography : தசைமின்னியக்கப் பதிவுக் கருவி; தசை மின்னலை வரைவி; தசை மின் வரைவி; தசைமின் வரையம் : செயல்திறத் தசைகள் உண்டாக்கும் மின்னோட்டத்தைப் பதிவு செய்யும் கருவி. -

electronic foetal : மின்னணுவியல் கருப்பைச் சுருக்கமானி : கருப்பை உயிரின் இதயத் துடிப்பு வேக வீதத்தையும், இடுப்பு வலியின்போது பெண்ணின் கருப்பையின் கருக்கங்களையும் அளவிடுவதற்கான மின்னணு வியல் சாதனம்.

electrooculography : விழிநிலை பதிவுக் கருவி : கண்ணின் நிலை, அசைவுகண்விழியின் முன்புறத் திற்கும் பின்புறத்திற்குமிடையிலான வேறுபாடு ஆகியவற்றை விழிப்பள்ளத்தின் தோலின் மீது மின்முனைகளை வைத்துப் பதிவு செய்வதற்குப் பயன்படும் கருவி.

electrophoresis : இழுதுபொருள் இயக்கம் : பயன்முறை மின் புலத்தின் தாக்கம் காரணமாக ஒரு திரவத்தில் மிதக்கும் இழுது பொருள் துகளின் இயக்கம். புரதங்களை அடையாளங்காண இது பயன்படுகிறது.

electroporation : மின்புலத் துடிப்பு : வளர்க்கப்படும் உயிரணுக்களினுள் டிஎன்ஏ-ஐச் செலுத்துவதற்குப் பயன்படும் துடிப்பூட்டிய மின்புலம்.

electropyrexia : மின்னியல் உடல் வெப்பம் : ஒரு மின்னியல் சாதனத்தினால் உடலில் உண்டாகும் உயர் வெப்பநிலை.

electroretinogram : விழித்திரை மின்னோட்ட வரைபடம்; விழித்திரை மின்னலை வரைவு; கண் திரை மின்வரைவியம்; மின்படியெடுப்பு : ஒளிபடும்போது விழித் திரையின் துலங்கல் திறனைப் படியெடுத்தல், ஒரு மின்வாயை விழி வெண்படலத்தில் அல்லது இமையிணைப்படலத்தில் வைத்தும், இன்னொரு மின்வாயை நெற்றியிலும் வைத்து இவ்வாறு செய்யப்படுகிறது. செயல் திறமுடைய கண் விழிப்பின் திரையில் உண்டாகும் மின்னோட்டங்களைப் பதிவு செய்த வரைபடம்.

electrotheraphy : மின் மருத்துவம்.

element : தனிமம் (தனிப்பொருள்) : ஒரு கூட்டுப் பொருளில் அடங்கியுள்ள பொருள்களில் ஒன்று. இத்தனிமங்கள், தூய வடிவில் அல்லது கூட்டுப் பொருள்களாக இணைந்து ஒரு பொருளின் முழுமையாக அமையும்.