பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

epicritic

431

enzymology


enzymology : செரிமானப் பொருளியல்; நொதிப்பியல்; நொதியியல் : செரிமானப் பொருள்களின் கட்டமைப்பு பற்றியும், அவற்றின் பணிகள் குறித்தும் ஆராயும் அறிவியல்.

eosin : சிவப்பூதாச் சாயம் : செவ்வூதா நிறமுடைய சாயப் பொருள். இது ஆய்வுக்கூடங்களில் நோய்க் காரணிகளைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிறமியை ஏற்கும் உயிரணுக்கள் ஒரு வகை.

eosinopaenia : குருதிச் செவ்வணுக் குறைபாடு : இரத்தத்தில் குருதிச் செவ்வணுக்களின் எண்ணிக்கை இயல்பு மீறி குறைந்துபோதல்.

eosiophil : சிவப்பூதாச் சாய உயிரணு : சிவப்பூதாச் சாயம் ஏற்கும் உயிரணுக்கள்.

eosinophilia : சிவப்பூதாச் சாய உயிரணு மிகுதி; குருதிச் செவ்வணு நலிவு : இரத்தத்தில் சிவப் பூதாச் சாயப்பொருள் உயிர் அணுக்கள் அதிகமாக இருத்தல்.

Epanutin : இப்பானுட்டின் : ஃபெனிட்டாயன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

ependyma : மூளை உட்சவ்வு : மூளையின் கீழறைகளிலும் தண்டுவடத்தின் மையப்புழைகளிலும் உட்பூச்சுச் சவ்வுப் படலம்.

ependymoblast : முதிரா மூளை உட்சவ்வுப்படலம் : மூளை உட் சவ்வுப் படலத்தின் முதிரா நிலை.

ependy moblastoma : மூளை உட்சவ்வுக்கட்டி : முதிரா மூளை உட்சவ்வுப்படலத்தின் உண்டாகும் உக்கிரமான கட்டி.

ependymoma : மூளை உட்சவ்வு உயிரணுக் கட்டி : மூளை உட் சவ்வுப்படல உயிரணுக்களில் உண்டாகும் கட்டி.

ephedrine : எஃபெட்ரின் : ஈளை நோய் (ஆஸ்த்மா) காற்றுக் குழாய் இசிப்பு ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்படும் மருந்து. தூசியினால் ஏற்படும் வேனிற்காலச் சளிக்காய்ச்சலுக்கும் பயன்படுகிறது.

epicanthus : கண்மூளை மடிப்பு : கடைக்கண்ணின் உட்புறத்தை மறைக்கும் தோல் வளர்ச்சி. இது பிறவியிலேயே உண்டாகும் நோய்.

epicardia : உணவுக் குழாய் அடிப்பகுதி : உணவுக் குழாயின் அடிவயிற்றுப்பகுதி.

epicondyle : புய எலும்பு மேடுகள் : புய எலும்பின் கடை கோடியில் உள்ள எலும்பு முண்டுகளுக்கு மேலேயுள்ள எலும்பு மேடுகள்.

epicritic : உணர்வு வேறுபாடு :தொடுதல் அல்லது வெப்பம் காரணமாக ஏற்படும் தூண்டுதலில்