பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

epicystostomy

432

epiglottis


உண்டாகும் சிறிய மாற்றங்களுக்குள் வேறுபாட்டுத் துலங்கல்.

epiċystostomy : சவ்வுப்பை அறுவைச் சிகிச்சை : சவ்வுப்பையின் மேற்புறத்தில் செய்யப்படும் அறுவைச் சிகிச்சை

epidermolysis : மேல்தோல் அழற்சி : மேல்தோல் தளர்ச்சி நிலையை அடைதல்.

ephelides : தோல் புள்ளி; கரும் புள்ளி : தோலில் இலேசான தவிட்டு நிறத்துடன் புள்ளிகள். இது நிறமி மணிகள் அதிகரிப்பதால் உண்டாகிறது.

epicanthus : கடைக்கண் மறைப்பு; கண்மூலை மடிப்பு : கடைக் கண்ணின் உட்புறத்தை மறைக்கும் தோல் வளர்ச்சி. இது பிறவியிலேயே உண்டாகிறது.

epicardium : நெஞ்சுப்பை உட்படலம்; இதய வெளியுறை; மேல் இதயம் : நெஞ்சுப்பையை மூடிக்கொண்டிருக்கும் சவ்வான குறையுறையின் உட்கிடப்புறுப்புப் படலம்.

epidemic : கொள்ளை நோய்; தொற்று நோய்; வெளிப் பரவுநோய் : ஒரு பகுதியில் பெரு வாரியான மக்களை ஒரே சமயத்தில் பாதிக்கும் நோய்.

epidemiology : கொள்ளை நோயியல்; வெளிப் பரவியல்; பரவு நோயியல் : கொள்ளை நோய்கள் பற்றி ஆராயும் அறிவியல்.

epidermis : மேல் தோல்; தோல் மேலடுக்கு; புறச் சருமம் : தோலின் மேற்பகுதிப் படலம்.

epididymectomy : விரை நீட்சி நீக்கம் : விரையின் மேற்பரப்பில் நீட்டிக்கொண்டிருக்கும் சிறிய நீளப்பகுதியை அறுவை மருத்துவம் முலம் அகற்றுதல்.

epididymis : விதை நீட்சி; விரை மேவி : விரையின் மேற்பரப்பில் நீட்டிக் கொண்டிருக்கும் சிறிய நீளப்பகுதி.

epididymitis : விதை நீட்சி வீக்கம்; விரை மேல் நாள அழற்சி.

Epidyl : எப்பிடில் : எத்தாக்ளுசிட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

epigastrium : மேல் வயிறு : வயிற்றறை மேல்பகுதி இரைப்பைக்கு நேரே மேலுள்ள அடிவயிற்றுப் பாகம்.

epigenetic : உயிரியக்க மாறுதல் : உயிரிகளின் செல்வாக்கினால் உண்டாகும் மாறுதல்கள். ஆனால் இது மரபணுக் கட்டமைப்பில் ஏற்படும் மாறுதல்களிடையில் உண்டாவதில்லை.

epiglottis : குரல் வளை மூடி : நாக்கின் பின்புறமுள்ள குருத் தெலும்பின் மெல்லிலை வடிவ முடி இது நாம் விழுங்கும்போது குரல் வளைக்குச் செல்லும்