பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ethyloleamineoleate

441

euglena


ethyloleamineoleate : எத்திலோலியாமினியோலியேட் : இழைமக் காழ்ப்பு கோளாறுகளுக்குக் கொடுக்கப்படும் மருந்து.

ethyl pyrophosphate (TEPP) : எத்தில் பைரோஃபாஸ்பேட் : வேளாண்மையில் பூச்சிக் கொல்லி மருந்தாகப் பயன்படுத்தப்படும் ஆர்கனோ ஃபாஸ்பரஸ் மனிதருக்கும் பெருந்தீங்கு விளைவிக்கக் கூடியது.

ethynodioi diacetate : எத்தினோடியால் டையாசிட்டேட் : கருப்பை இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தும் மருந்து.

Etophylate : எட்டோஃபைலேட் : தியோஃபைலின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

etretinate : எட்ரிட்டினேட் : கடுமையான யானைச் சொறி (நமட்டுச் சொறி) நோய்க்குப் பயன்படுத்தப்படும் 'ஏ' வைட்டமின் வழிப்பொருள்.

etymology : சொற்பிறப்பியல் : சொற்களின் பிறப்பு, வளர்ச்சி பற்றி ஆராயும் அறிவியல்.

eucalyptus oil : நீலகிரித் தைலம் : நச்சுத் தடை மருந்தாகப் பயன் படும் தைலம். இது ஒருவகைத் தேவதாரு மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது.

Eucortone : யூக்கோர்ட்டோன் : குண்டிக்காய் சுரப்பி நீரின் வணிகப் பெயர்.

Eudemine : யூடெமின் : டையாக்சைடின் வணிகப் பெயர்.

eugenics : இன ஆக்க மேம்பாட்டியல் : இனத்தை மேம்படுத்தி வளம்பட உயர்த்தும் வகை முறைகள் பற்றி ஆராயும் ஆய்வுத் துறை.

euglena : யூக்ளினா : நுண்ணிய ஓரணு உயிர்களில் ஒன்று. இது சிறிய பச்சை இலைகள் போலத் தோற்றமளிக்கும். தேங்கிக் கிடக்கும் நீரில் இது பசுமையாகப் படர்ந்திருக்கும்.