பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

euglucon

yyyyyy


euglucon : யூக்ளூக்கோன் : கிளைபெங் கிளாமைட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

euglycaemia : இயல்பு குருதி குளுக்கோஸ் : இரத்தத்தில் குளுக்கோஸ் இயல்பான அளவில் இருத்தல்.

euglycaemic : யூக்ளைக்கோமியா சார்ந்த : யூக்ளைக்கோமியா தொடர்புடைய அல்லது அதன் பண்புடைமை.

eugynon : யூஜினான் : எத்தினி லோஸ்டிராடியோல் அடங்கிய வாய்வழி உட்கொள்ளப்படும் கருத்தடை மருந்தின் வணிகப் பெயர்.

eukaryosis : முதிர் உயிரணு மையம் : சவ்வு சூழ்ந்துள்ளதும், உறுப்பு உயிரணுக்கள் அடங்கியுள்ளதுமான கருமையான நிலை.

eunuch : அலி; ஆண்மையிழந்தவர் : விரையகற்றப்பட்ட ஆண்.

eunuchoidism : அலிப்பண்பு : பூப் பெய்வதற்கு முன்பு ஏற்படும் ஆண்ட்ரோஜன் குறைபாடு. இதனால், குழந்தைப் பருவ புறப்பிறப்புறுப்புகள், இரண்டாம் நிலை பாலியல் பண்புகள், விந்துக் குறைபாடு, ஆண்மயிர் இன்மை, உரத்த குரல், மலட்டுத் தன்மை, காவேட்கை இன்மை, தசை வளர்ச்சி குன்றுதல், நீண்ட எலும்பு வளர்ச்சி ஆகியவை உண்டாகும்.

Euphoria : நன்னிலையுணர்வு ; உயர்வுணர்வு; உவகை; பேரு வகை :நன்னிலையில் உள்ளோம் என்ற மனநிறைவு நிலை.

Eurax : யூராக்ஸ் : யூரோட்டாமிட்டோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

eurhythmics : உடலியக்க ஒத்திசைவமைதி : இசைமுறை உடலியக்க ஒத்திசைவமைதிப் பயிற்சி.

eusol : யூசோல் : சுண்ணகக் காரத்திலிருந்து தயாரிக்கப்படும் நுண்மங்களைக் கொல்லும் நச்சுத்தடை மருந்து.

eustachian tube : தொண்டைக்குழாய்; காது-தொண்டைக்குழாய் : முன் தொண்டையிலிருந்து நடுக்காதுக் குழிவரையில் செல்லும் குழாய். இது 40-50 மிமீ நீளமுடையதாக இருக்கும்.