பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

framycetin

475

frenotomy


தம், உடல் எடை, புகைபிடித்தல், குருதிநீர் கொழுப்பினி போன்ற அபாயக் காரணிகளுக்குமிடையிலான தொடர்பினைத் தீர்மானிப்பதற்காக, 28,000 மக்களிடம் 20 ஆண்டுகள் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

framycetin : ஃபிரமிசெட்டின் : நியோமைசின் மருந்துடன் நெருங்கிய தொடர்புடையது. காது, கண், தோல் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

Franol : ஃபிரானால் : கடும் மார்புச் சளி நோய்க்கும், ஈளை நோய்க்கும் கொடுக்கப்படும் ஒருவகை மருந்தின் வணிகப் பெயர்.

Freamine : ஃபிரியாமின் : முட்டை இறைச்சி, மீன் ஆகியவற்றிலுள்ள புரதத்தைப் போன்று உட்செலுத்தப்படும் அமினோ அமிலங்கள் ஒன்றின் செயற்கைத் தயாரிப்பின் வணிகப் பெயர்.

free : கட்டிலா; கட்டற்ற; இலவசம்.

free-floating : சுதந்திர மிதவை : எந்த ஒரு கோட்பாட்டுடனும் இணைவுடையதாக இல்லாத ஊடுருவிப் பாயும் கவலை, ஒரு முகப்படாத அச்சம்.

free-living : தனியே வாழும்.

freeze, drying : உறைகாய்வு.

freezing : நடுக்கம் : நன்கு முற்றிய பார்க்கின்சன் நோயில் (அசையா நடுக்கம்) காணப்படும் நடக்கும் பாணியில் ஏற்படும் தடுமாற்றம்.

freiberg's infarction : எலும்புத் திசு அழுகல் : எலும்புத் திசுவின் இழைமங்கள் அழுகுவது. இந்த நோய் பெரும்பாலும் இரண்டாவது கால்விரல் எலும்புகளில் ஏற்படுகிறது. ஃபரெயில் பர்க் என்பவரால் விளக்கப் பட்டது.

frei's test : ஃபிரை சோதனை : நிணநீர் திசுக்கட்டிக்கான தோல் சோதனை. இதனை ஜெர்மன் தோலியலறிஞர் வில்லியம் ஃபிரை விவரித்துக் கூறினார்.

Freiberg's disease : ஃபிரை பெர்க் நோய் : இரண்டாவது, மூன்றாவது கால்விரல் எலும்புகளின் நுனியில் உண்டாகும் எலும்பு அழற்சி நோய். இதனால் வலி, உள்ளங்கால் முடக்கம், பாதிக்கப்பட்ட பாதம் அழற் சியடைதல் ஆகியவை உண்டாதல் பிரிட்டிஷ் எலும்பு மருத்துவ அறிஞர் ஃபிரடரிக் ஃபிரைபெர்க் பெயரால் அழைக்கப்படுகிறது.

Frenkel's exercises : முள்ளெலும்புப் பயிற்சி : தசைக்கும் முட்டுகளுக்கும் உணர்வூட்டுவதற்காக முதுகுத் தண்டிலுள்ள முள்ளெலும்புக்குத் தனிவகைப் பயிற்சியளித்தல்.

frenotomy : ஃபிரீனோட்டமி : உறுப்பின் இயக்கத்தைத்