பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hand

517

Hangman's fracture


56°C வெப்ப நிலையில் செயலற்றதாக்குவதன் மூலம் குருதி வடிநீரிலிருந்து நிரப்புக் காற்று நீக்கப்பட்டுவிட்டால் உடைதல் ஏற்படுவதில்லை.

hand : கை : மனிதருக்கு இடுப்புக்கு மேலுள்ள உறுப்பு நாற்கால் விலங்குகளுக்கு முன்னங்கால்.

Hand-arm vibration syndrome : கை-புயம் அதிர்வு நோய் : கையால் கையாளும் அதிர்வூட்டும் கருவிகளை நீண்ட நாட்கள் பயன்படுத்துவதன் விளைவாக நாளச்சுவர் இசிப்பு ஏற்பட்டு குளிர்ச்சி உண்டாவதால் ஏற்படும் ரேனாட் நிகழ்வு போன்ற நோய்.

handedness : ஒருகைப் பழக்கம் : ஒருகைக்குப் பதிலாக இன்னொரு கையைப் பயன்படுத்தும் போக்கு.

hand-foot syndrome : கை-பாதம் நோய் : அரிவாள் உயிரணுச் சோகையில் ஏற்படும் நோய்த் திருப்புமுனை. குருதி நாளங்களில் சிவப்பணுக்கள் கசடாவதால் இது ஏற்படுகிறது. இதனால் கை- கால் சிற்றெலும்புகளில் திசு அழிவு ஏற்படுகிறது. அழற்சியுடைய புதிய எலும்பு உருவாகிறது. அரிவாள் உயிரணு வீக்கம் உண்டாகி வலி ஏற்படும்.

handicapped : ஊனமுற்றவர்; முடமானவர் : இயல்பாக இயங்க முடியாதபடி உறுப்புக் குறை பாடுள்ளவர்.

handle : கைப்பிடி.

hand mirror cell : கைக்கண்ணாடி உயிரணு : கருமையத்துடன் கூடிய ஒரு நிணநீர் உயிரணு, இந்தக் கருமையம் கண்ணாடி முனையில் அமைந்து நீண்ட வடிவில் இருக்கும். இது கண்ணாடிக் கைப்பிடிபோல் தோன்றும். இது குருதி உருவாக்க நிலையில் உக்கிரமாக அல்லது உக்கிரமின்றி இருக்கும்.

hand piece : கைக்கருவி :பல் தயாரிக்கவும், அதற்கு மெருகேற்றவும் பயன்படுத்தப்படும் சாதனங்களைப் பிடித்துக் கொள்ளும் கைக்கருவி.

hanging drop method : தொங்கு துளி முறை : பாக்டீரியாவின் இயக்கத்திறனைக் கணித்தறிவதற்கான ஒரு முறை. இதில், கசையிழையாக்கிய பாக்டீரியம் ஒரு தெளிவான உடலியல் கரைசலின் ஒரு துளியில் ஒரு மூடியை கண்ணாடியில் (தலை கீழாக) வைக்கப்பட்டு, நுண் ணோக்காடியால் ஆய்வு செய்யப்படுகிறது.

Hangman's fracture : ஹாங்மன் முறிவு : ஊடுவரை அக்சின் நரம்பு துளையின் வழியாக ஏற்படும் இருமுகப் பிளவை முறிவு. இதனால், முதுகந்தண்டின் மையப்பகுதியில் கடுமையான