பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/542

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Hycal

hydrocele


Hycal : ஹைக்கால் : சிவப்பு நிறமான நறுமணமுள்ள புரதமற்ற திரவ மருந்தின் வணிகப் பெயர்.

hydatid : நோய் நீர் தேக்கம்.

hydatid cyst : நாடாப்புழு நீர்க்கட்டி : நாடாப்புழுவின் முட்டைப் புழுவினால் உண்டாகும் நீர்க் கட்டி நாய், ஆடு ஆகியவற்றிலிருந்து இது மனிதருக்குத் தொற்றுகிறது. இதனை அறுவை மருத்துவம் மூலம் அகற்றலாம்.

hydatidiform : நோய் நீர்த்தேக்கம்; நீர்க்குமிழ் வடிவ : இழைக்கச்சைப் புழுவினாலாகி அதனை உட்கொண்ட நோய் நீர்த்தேக்கப் பை.

hydraemia : குருதிநீர் மிகுதி; குருதி நீர் மிகைப்பு : இரத்தத்தில் உயிரணு அளவைவிட நிணநீர் அளவு அதிகமாக இருத்தல். நிறைமாதக் கர்ப்பத்தின் போத இந்நிலை இருக்கலாம்.

hydralazine : ஹைட்ராலாசின் : இரத்த அழுத்தத்தைக் குறைக்க கூடிய செயற்கைக் கூட்டுப் பொருளின் வணிகப் பெயர்.

hydraminios : கருத்திரவ மிகைசுரப்பு; நீர்ச்சூலை; பனிக்குடநீர் மிகைப்பு; நீர் பனிக்குடம் : கருத் திரவம் அளவுக்கு அதிகமாகச் சுரத்தல்.

hydrargaphen : ஹைட்ரார்காஃபென் : சீழ் உண்டாகும் நுண் ணுயிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ஒரு பாதரசப் பொருள். இது பாலேடு, தூள், திரவ வடிவில் கிடைக்கிறது.

hydrarthrosis : எலும்பு உயவு நீர்; நீர்ம மிகை மூட்டு; நீர் மூட்டு : எலும்பு முட்டிணைப்பினுள் கசிவுறும் ஒருவகை உயவு நீர். இது இளம்பெண்களிடம் தோன்றி சில நாட்கள் இருந்து விட்டு, மர்மமாக மறைந்து விடும்.

hydrate : ஹைட்ரேட்; நீரேறிய : தனிமத்துடன் அல்லது மற்றொரு சேர்மத்துடன் நீர் இணைந்த சேர்மப்பொருள்.

Hydrenox : ஹைட்ரினாக்ஸ்; ஹைட்ராஃபலூமெத்தியாசிட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

hydro : நீர் மருத்துவமனை : நீர் மருத்துவ முறையினைப் பின் பற்றும் மருந்தகம்.

hydroa : தோல் அழற்சி : வெப்ப மண்டலப் பகுதிகளில் வெயில் படும் தோல் பகுதிகளில் ஏற்படும் அழற்சி நோய். இது குழந்தைகளுக்கு அதிகம் உண்டாகும்.

hydrocarbon : ஹைடிரோகார்பன் : ஹைட்ரஜன், கார்பன் இரண்டை மட்டுமே கொண்டுள்ள ஒரு கூட்டுப்பொருள்.

hydrocele : ஒதம்; நீர்ம விரை வீக்கம்; நீரண்டம்; விதை நீரம் : மனித விரைப் பையில் நீர்க் கோர்ப்பதால் உண்டாகும் வீக்கம்