பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/564

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ichneumon flies

563

ideation


ஒருங்கிணைந்த தாய்-சேய் மேம்பாட்டு சேவை என்று அழைக்கப்படுகிறது.

ichneumon flies : ஒட்டுண்ணிப் பூச்சி : மற்றொரு பூச்சியின் முட்டைப் புழுக்களில் தான் முட்டையிடும் பளிங்கு போன்ற நான்கு சிறகுகளை உடைய சிறிய ஒட்டுண்ணிப் பூச்சி வகை.

ichthammol : இக்தம்மோல் : மென்களிக்கல்லைச் சிதைத்து வடித்தல் மூலம் கிடைக்கும் திண்மையான கறுப்புத் திரவம். தோல் கோளாறுகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றது. கிளிசரைனில் இதன் கரைசல் வீக்கத்தைக் குறைக்கும்.

ichthyol : இக்தியால் : இக்தம் மோல் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

ichthyoses : தோல் கெட்டியாதல் : மேல்தோல் கெட்டியாகி சுர சுரப்பாகி விடும் நோய்.

ichthosis : செதிள்நோய் : கொம்புப் பொருள் படலத்தின் மிகை வளர்ச்சி. இதனால் மீன் தோல் போன்று கனமான, உலர்ந்த, செதிள் நிறைந்த தோல் உண்டாகும்.

ICSH : ஐ.சி.எஸ்.எச் : சிறு பிளவுகள் சார்ந்த உயிரணுக்களைத் தூண்டுகிற இயக்குநீர். இது கபச்சுரப்பியின் முன்புற மட லினால் உற்பத்தி செய்யப்படுகிறது.

ictal : நாடித்துடிப்பு சார்ந்த : காக்காய் வலிப்பு நோய் போன்ற திடீர்த்தாக்குதல் தொடர்புடைய.

icterus : மஞ்சட் காமாலை; மஞ் சணம் : செந்நிறக் குருதியணுப் பொருள் அளவுக்கு அதிகமாக அழிக்கப்படுவதால் ஈரலில் ஏற்படும் மரமரப்பு நோய்.

icterus, nednatorum : மழமஞ்சனம்.

ictus : திடீர் வலிப்பு : பிறவியில் காணப்படும் பிடிப்பு, வலிப்பு, திடீர்த்தாக்குதல் அல்லது இசிப்பு.

ICU : ஐ.சி.யூ : தீவிரச் சிகிச்சைப் பிரிவு (Intensive Care Unit) என்பதன் சுருக்கம்.

ICCU : ஐ.சி.சி.யூ : தீவிர நெஞ்சுப் பைச் சிகிச்சைப் பிரிவு (intensive Coronary Care Unit) என்பதன் சுருக்கம்.

id : (1) மரபியல் மூலக்கருத்து; ஆழ் மனம் : கரு உயிர்ம இனக் கீற்றில் மரபியல் சிறப்பியல்பு களையெல்லாம் கொண்டுள்ளதாகக் கருதப்படும் மூலக்கருத்து. 2) உணர்வுந்தல் , தனிப்பட்ட ஒருவரின் உணர்வுந்தல்களின் தொகுப்பு.

idea : எண்ணம்; கருத்து.

ideation : கற்பனை செய்தல் : எண்ணப்படிவங்களை உருவாக்குதல். இதில் சிந்தனை,