பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/591

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

intestine, small

590

intralymphatic


intestine, small : சிறுகுடல்.

intertrigo : தோல் வீக்கம் : ஈர மான தோல் மடிப்புகளில் ஏற்படும்.

intervertebral : முன்னெலும்புகளிடையே.

intima : குருதி நாள உள் பூச்சுச் சவ்வு உட்படலம் : குருதி நாளத் தின் உள் பூச்சுச் சவ்வுத் திசு.

intoed : உள்நோக்கிய கால் விரல்கள்.

intolerance : சகிப்புணர்வின்மை; சகியாமை : சத்துப்பொருள்கள், மருந்துகள் போன்ற குறிப்பிட்ட பொருள்களை உடல் ஏற்றுக் கொள்ள மறுத்தல்.

intorsion : கண்விழி உள்முக சுழற்சி : கண்விழி மூக்கை நோக்கி உள் முகமாகச் சுழல்தல்.

intoxicant : போதைப் பொருள்; வெறியம் : போதையுண்டாக்கும் ஒருவினையூக்கி.

intoxication : போதை : போதை மருந்து அல்லது ஆல்ககால் பானம் மூலம் போதையுண்டாகும் நிலை.

intra-abdominal : உள் அடிவயிறு; வயிற்றுள்; வயிற்றினுள்.

intracapillary : தந்துகியுள்.

intracapsular : பொதியுறையுள்.

intracardiac : இதயத்துள்.

intracath : செருகு ஊசி : ஒரு சிரையினுள் நுழைக்கப்படும் ஒரு செருகு குழல் சூழ்ந்துள்ள வளையாத ஊசி.

intracellular : உயிரணுவுள்.

intracerebral : பெருமூளையுள்.

intracorpuscular : குருதிக் கணத்துள்.

intracranial : மண்டைடோட்டுள்; மண்டையுள்.

intracranial pressure (ICP) : மண்டையோட்டு உள்ளழுத்தம் : மண்டையோட்டினுள் உள்ளழுத்தத்தை முளைத்திசுக்கள் இயல்பான அளவில் வைத்திருத்தல்.

intracutaneous : தோல் திசுவினுள்; சருமத்துள்; தோலுள்.

intradermal : தோலினுள்; தோலுள்.

intradural : மூளைச் சவ்வுள்; கடின உறையுள் : மூளையையும் முதுகுத் தண்டையும் சூழ்ந்திருக்கும் மேல் சவ்வின் உட் பகுதி.

intrahepatic : ஈரலுள்.

intralobular : காது மடலுள்; நுண் வளயக.

intralymphatic : ஊனீர் நாளத்துள்.