பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/616

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

kell factor

615

kerato conjunctivitis


kell factor : கெல் காரணி : காக்கசியர்கள் 10% பேருக்கு பரம் பரையாகக் காணப்படும் ஒரு வகை குருதிக் குழுமம் சார்ந்த காரணி.

Kellgren's syndrome : கெல்கிரன் நோய் : அரிமானமானம் செய்யும் எலும்பு மூட்டு வீக்கம் (கீல்வாதம்). இதனை சுவீடன் மருத்துவ அறிஞர் ஹென்றி கெல்கிரன் விவரித்துக் கூறினார்.

keloid : வடுத் திசு வளர்ச்சி; வடு மேடு; தழும்பேற்றம் : தழும்புத் திசு அளவுக்கு அதிகமாக வளர்ச்சியடைதல். இதன் உறுப்பு சுருங்கி உருத்திரிபு ஏற்படும். சிலவகைக் கறுப்புத் தோல்களில் இது ஏற்படுகிறது.

kemadrin : கெமாட்ரின் : புரோசைக்ளிடின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

kemicetine : கெமிசெட்டின் : குளோராம் பெனிக்கால் என்ற மருந்தின் வணிகப்பெயர்.

kempner diet : கெம்ப்னெர் சீருணவு : உப்புக் குறைந்த சீருணவு. இதன் மூலம் 2000 கலோரிகள் கிடைக்கும். இது மிகை இரத்த அழுத்தத்தின் போது பயன் படுத்தப்படுகிறது. அரிசி, கனிகள், சர்க்கரை அடங்கிய இந்த உணவை அமெரிக்க மருத்துவ அறிஞர் வால்ட்டர் கெம்ப்னெர் உருவாக்கினார்.

Kenny treatment : கென்னி சிகிச்சை : தசைநாள அழற்சிக்கான உடற்பயிற்சிச் சிகிச்சை, சகோதரி எலிசபெத்கென்னி என்ற ஆஸ்திரேலியச் செவிலி இந்த சிகிச்சையைக் கண்டு பிடித்தார்.

keratectomy : விழிவெண்படல அறுவை மருந்து : விழிவெண் படலத்தை அறுவை மருந்து மூலம் துண்டித்து எடுத்தல்.

keratin : கெராட்டின் : கொம்பு, நகம், பல் முதலியவை உருவாவ தற்கு அடிப்படைப் பொருளாக நிற்கும் கெட்டிப்பொருள். இதில் கந்தகம் அடங்கியிருக்கும்.

keratinization: கொம்புப் பொருள் மாற்றம் : வைட்டமின்-A குறைபாடு காரணமாகக் கொம்புத் திசு மாற்றமடைதல்.

keratitis : விழிஊடுருவு படல அழற்சி; விழி வெண்படல அழற்சி; ஒளிப்படல அழற்சி : விழி வெண்படலத்தில் ஏற்படும் வீக்கம்.

keratoacanthoma : கெரோட்டின் கட்டி : செதில்படல உயிரணுக்களைக் கெரோட்டினாக்குவதை உள்ளடக்கிய விரைவில் உண்டாகும் கட்டி. இது தானாகவே கரையக்கூடியது.

kerato conjunctivitis : கண் நோய்; கண் சவ்வழற்சி : விழி வெண்படலமும், இமையிணைப் படலத்தில் ஏற்படும் வீக்கம். இது ஒரு தொற்று நோய்.