பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/620

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

kidney,artificial

619

kinetosis


kidney,artificial : செயற்கை சிறுநீரகம்.

killed vaccine : இறந்த அம்மைப் பால் : இறந்துபோன ஆனால் காப்பு மூல இயக்காற்றலுடைய பாக்டீரியா உள்ள அல்லது நோய் உண்டாக்காமலே பாதுகாப்புத் தற்காப்பு மூலங்களை உற்பத்தி செய்யக்கூடிய கிருமிகளை உடைய அம்மைப்பால். எடுத்துக்காட்டு: டிபிடி அம்மைப் பால்.

killer (K) cel : கொல்லி உயிரணு(K) : ஒரு பெரிய குருணை வடிவ நிணநீர் உயிரணு. இது குறிப்பிட்ட தற்காப்பு மூலம் பூசிய உயிரணுவைப் படிப்படியாக நசிக்கிறது. இவை இரு வகைப்படும். இயற்கைக் கொல்லி (NK), உயிரணுக்கள், கொல்லி (K) உயிரணுக்கள்.

kinaesthesis : தசையசையுணர்வு; இயங்குணர்வு.

kinanaesthesia : தசைஇயங்குணர்வு இழப்பு : தசை இயங்குவதை உணரும் ஆற்றலை இழத்தல்.

kinase : கைனேஸ் : 'டிரான்ஸ் ஃபெரேஸ்' என்ற செரிமானப் பொருள் வகையைச் சேர்ந்த ஃபாஸ்போரிலேஸ் உட்பிரிவு. இது கொடையளிக்கும் மூலக்கூற்றிலிருந்து அதிக சக்தி வாய்ந்த ஃபாஸ்பேட்டுகளை மாற்றுவதை ஊக்குவிக்கிறது.

kineplasty : உறுப்படி இயக்க மருத்துவம் : செயற்கை உறுப்பில் இயக்கத்தை உண்டுபண்ணுவதற்காக, வெட்டியெடுத்த பகுதியின் முனையின் உறுப்படியினைப் பயன்படுத்துதல்.

kinesiology : தசை இயக்கவியல் : உடல் உறுப்புகளின் தசை இயக்கங்களை அறிவியல் முறை ஆராய்தல்.

kinetic : இயக்கம் சார்ந்த; இயக்க வியல் : இயக்கத்தின் விளைவுடைய.

kinetocardiogram : தசை இயக்கவரைபடப் பதிவு : தசைஇயக்க வரைபடத்தின் மூலம் பெற்ற வரைபடப் பதிவு.

kinetocardiography : தசை இயக்க வரைபடம் : நெஞ்சுப்பை பகுதியின் மீது மார்புச் சுவரின் புறப்பகுதி மெதுவாக அதிர்வதன் வரைபடப் பதிவு. இந்த அதிர்வுகள், மார்பின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் முழுமையான இயக்கத்தை குறிக்கிறது.

kinetoplast : கசையிழைச் சலாகை : கசையுறுப்பின் அடித்தளத்தில் ஒட்டுக்கசையிழைகளில் காணப்படும் சலாகை வடிவக் கட்டமைப்பு.

kinetosis : தசைஇயக்கக் கோளாறு : பழக்கமில்லாத அசைவுகள் காரணமாக உண்டாகும் ஒரு கோளாறு.