பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/621

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

kinking

620

Klinefelter's syndrome


kinking : ഖளைவு; நெளிவு.

kinky hair disease : முறுக்கு மயிர் நோய் : X-தொடர்புடைய ஒரு பின்னடைவு நோய். இதில் குறைபாடுடைய செப்பு வளர்சிதை மாற்றம் எற்படும். இதனுடன் சேர்த்து, முடி வளர்ச்சிக் குறைவு திடீர் நோய்ப்பிடிப்பு, குறுகிய மங்கல் நிறைவுடைய, திரிபடைந்த, உடைந்த முடிக்கீற்றுகள், உச்சித்தோல் அழற்சி உண்டாகும்.

Kinsbourne syndrome : கின்ஸ்போன் நோய் : குழந்தைப் பருவத்தில் ஏற்படும் மூளை வீக்க நோய்.

kinship : குருதியுறவு : ஒரு பொதுவான மூதாதையர் வழி வந்த தனிமனிதர்களின் ஒரு குழுமம். குடும்ப உறவு முறை.

kiraunophobia : இடிக்கிலி : மின்னல், புயல் கண்டு ஏற்படும் மனநிலை திரிந்த அச்ச உணர்வு.

Kirkland knife : கிர்க்லண்ட் கத்தி : இதய வடிவான கத்தியுடன் ஒர் அறுவைச் சிகிச்சைக் கத்தி. இதில் எல்லா முனைகளும் கூர்மையாக இருக்கும். அமெரிக்க பல்மருத்துவ அறிஞர் ஒலின் கிர்க்லண்ட் இதனைக் கண்டு பிடித்தார். இது பல் எகிறுவீக்க அறுவைச் சிகிச்சையில் பயன் படுத்தப்படுகிறது.

Kirschner wire : கிரிஷ்னர் கம்பி : முறிவடைந்த எலும்புகளைக் குந்திப் பதிக்க வைக்கப்படும் ஒரு எஃகுக் கம்பி.

kissing ulcer : முத்தமிடும் அழற்சிப்புண் : 1. எதிரெதிர் மேற் பரப்புகளில் உறுப்புகளின் ஏற்படும் அழற்சிப்புண். எ-டு: தானே தடுப்பு ஊசிபோடுதல் காரணமாகப் பெண்பால் கருவாயக எதிர்ப்புறங்களில் ஏற்படும் புண். 2. பின்புற, முன்புறச் சுவர்களில் எதிரெதிர் பக்கங்களில் ஏற்படும் முன் சிறுகுடல் அழற்சிப் புண்கள்.

kleptomania : திருட்டுப் பழக்கம்; அனிச்சைத் திருட்டு; திருட்டு வெறி : மனக்குழப்பம் காரணமாகக் கட்டாயமாகத் திருடும் பழக்கம்.

klima needle : கிளிமா ஊசி : குறுகிய சரிவாக அமைந்த, அகன்ற துளையுடைய ஊசி. இதில் தக்கவாறு அமைத்துக் கொள்ளக்கூடிய காப்புடைய அறுவைத் துழாவு கருவி பொருத்தப்பட்டிருக்கும். இது எலும்பு மச்சையை உறிஞ்சி இழுக்கப் பயன்படுகிறது.

Klinefelter's syndrome : கிளைன்ஃபெல்ட்டர் நோய் : அமெரிக்க மருத்துவ அறிஞர் ஹாரி கிளைன் ஃபெல்ட்டர் இந்த நோயை விவரித்துக் கூறினார். இதில் சிறிய விரை, விந்தணு இன்மை,