பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/640

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

leucopheresis

639

leukotrienes


leucopheresis : குருதி வெள்ளணுப்பிரிவு : பின்னடைந்த குருதி யிலிருந்து குருதி வெள்ளணுக்கள் தனியாகப் பிரியும் செயல் முறை.

leucoplakia : வெண்பட்டை ஒட்டு; வெண்படலம் : சளிச்சவ்வின் மீது வெண்மையான கனமான பட்டைகள் ஒட்டிக்கொள்ளுதல். இது புற்று நோய்க்கு முந்திய நிலை என்று கருதப்படுகிறது.

leucopoiesis : வெள்ளையணு உருவாக்கம்; வெள்ளையணு வாக்கம்; வெள்ளையணு வளர்வு : இரத்தத்தில் வெள்ளணுக்கள் உருவாதல்.

leucorrhoea : வெள்ளைப் போக்கு; வெள்ளை வீழ்தல்; வெள்ளை : பெண்ணின் கருப்பை வாய்க் குழாயிலிருந்து (யோனிக் குழாய்) பசை போன்ற வெள்ளைப் போக்கு (வெண் கசிவு) ஏற்படுதல்.

leucotomy : மூளைத் தகட்டு அறுவை : மூளை முன் அலகின் ஊசி அறுவை அலைக்கழிப்பு நரம்புக் கோளாறுகளில் இது பயன்படுத்தப்படுகிறது.

leucovorin : லியூக்கோவோரின் : வாய்வழி கொடுக்கப்படும் ஃபோலினிக் அமிலம்.

leukaemia : வெள்ளையணுப் பெருக்கம்; வெள்ளையணு மிகைப்பு; வெள்ளையணுப்புற்று; வெண்புற்று : குருதி வெள்ளை நுண்மப் பெருக்கக் கோளாறு.

leukaemid : வெண்புற்றுக் கொப்புளம் : குறிப்பிடப்படாத தோல் கொப்புளங்கள். இது பெரும்பாலும் வெண்புற்றுடன் தொடர்புடையது.

leukopenia : வெள்ளையணுக் குறை.

leukeran : லியூக்ரன் : குளோராம் புசில் என்ற மருந்தின் வணிக பெயர்.

leukoplakia : வெண்தடிப்புப் படலம்; வெண்படலம் : சளிச் சவ்வுப் படலங்களில் ஏற்படும் தடித்த வெண்மையான படலம். இது வாயினுள் உதடுகளில் அல்லது பிறப்புறுப்புகளில் உண்டாகலாம். இது புற்று நோய்க்கு முந்திய நிலையைக் குறிக்கும். சில சமயம் மேகப் புண் காரணமாக உண்டாகலாம்.

leukopoiesis : வெள்ளையணு வளர்வு.

leukosarcoma : நிணநீர்த்திசுக் கட்டி : ஒருவகை உக்கிரமான நிணநீர்த்திசுக்கட்டி. இதில் எலும்பு மச்சை வெள்ளணு வரிசையைச் சேர்ந்த ஏராளமான முதிரா உயிரணுக்கள் சுற்றி வரும்.

leukotrienes : இடையீட்டுப் பொருள்கள் : அராக்கிடோனிக் அமில வளர்சிதை மாற்றத்தில் உண்டாகும் உயிரியல் முறையில்.