பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/646

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

lipogranuloma

645

liquorice


கூடிய இழைமத் திசுவில் உண்டாகும் உக்கிரமற்ற கட்டி.

lipogranuloma : குருணைக்கட்டி நோய் : இது திசுக்களில் கொழுப்புப் பொருள் படிவுகளுடன் சேர்ந்து காணப்படும்.

lipoid : கொழுப்போலி.

lipoidosis : கொழுப்புப் பொருள் மிகைத் திரட்சி : ஒருவகை வளர் சிதை மாற்றக் கோளாறு. இதில், உடலில் சில கொழுப்புப் பொருள்கள் அளவுக்கு அதிகமாகத் திரண்டிருக்கும்.

lipolysis : கொழுப்புப் பகுப்பு; கொழுப்பழிவு; கொழுப்பு முறிவு; கொழுப்புச் சிதைவு :செரிமானப் பொருள் மூலம் வேதியியல் பகுப்பாய்வு முறை.

lipoma : கொழுப்புக் கட்டி; கொழுப்புத் திசுக்கட்டி; கொழுப்புப் புத்து; கொழுப்புக் கட்டி : கொழுப்புத் திசு அடங்கிய கடுமையற்ற கட்டி.

lipoprotein : கொழுப்புப்புரதம் : அதிக அடர்த்தியுடைய கொழுப்புப் புரதம்.

liposarcoma : உக்கிரத் திசுக் கட்டி : கொழுப்புத் திசுப் பெருக்கம் அல்லது பருத்த திசு அடங்கியுள்ள உக்கிரமான நிலை.

liposome : கொழுப்புச் சவ்வுப் பை : கொழுப்புத் துணை அடுக்கு உள்ள செயற்கையான கோள வடிவ சிறு சவ்வுப்பை, இது, உயிரணுவுக்குள் டிஎன்ஏ முதலியவற்றைச் செலுத்துவதற்கான செயற்கைச் சவ்வு மண்டலமாகச் செயற்படுகிறது. நச்சு மருந்துகளின் ஒரு மருந்து வழங்கீட்டு மண்டலமாகவும் இது செயற்படுகிறது.

liposuction : தோலடித் திசு அறுவை மருத்துவம் : இது ஒர் ஒப்பனை அறுவை மருத்துவம். இதில் கொழுப்பின் உறுப்பெல் லைக்குட்பட்ட பகுதிகள் ஒர் உலோக வடிகுழாய் வழியாகத் தோலடித் திசு அகற்றப்படுகிறது.

lipotropic : கொழுப்பு வளர்; கொழுவளர்.

lipuria : சிறுநீர்க் கொழுப்பு; கொழுப்பு இழிவு.

liquefaction : நீர்ப்பு.

liquid: நீர்மம்.

liquor : மதுபானம்; சாறு : சாராயம் முதலிய போதை தரும் குடி வகை.

liquorice : அதிமதுரம் : அதிமதுர வேரிலிருந்து எடுக்கப்பட்டு மருந்தாகவும், தின்பண்டமாகவும், பயன்படும் கருநிறப் பொருள்.