பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

actomyosin

65

acute


actomyosin : ஆக்டொமையோசின் : தசை இழைகளில் உள்ள ஒரு புரதத் தொகுப்பு. ஆக்டின் மற்றும் மையோசின் புரதக் கூறுகளை உள்ளடக்கியது.

actrapid : அக்ட்ராப்பிட் : இயல் நிலை. இன்சுலின் ஊசி மருந்தின் வணிகப்பொருள்.

actual : உண்மையான; நடை முறையில் உள்ள.

acuity : கூர்மை; கூர்மைத் திறன் : கூர்மை, தெளிவு, நுண்மை தெளிவாகவும் கூர்மையாகவும் கேட்குந்திறன் கேட்புக் கூர்மைத் திறனாகும். இசைக் கவடு, தாழ்குரல், ஒலிமானி ஆகியவற்றின்மூலம் இத்திறன் சோதனை செய்யப்படுகிறது. குழந்தைகளின் கேட்புக் கூர்மைத் திறனைச் சோதிக்க மணிஒலி, கிலுகிலுப்பை, தேக்கரண்டி பயன்படுத்தப்படுகின்றன. கண் விழியின் பின்புறத்திரையில் உருக்காட்சிகள் தெளிவாக ஒரு முகப்பட்டு விழுவதைப்பொறுத்துப் பார்வைக் கூர்மைத் திறன் சோதனை செய்யப்படுகிறது. இந்தச் சோதனை பெரும்பாலும் 6 மீட்டர் துரத்திலிருந்து ஸ்னெலன் சோதனை முறைப்படி செய்யப்படுகிறது.

acuity of vission : பார்வை நுட்பம்; பார்வைக் கூர்மை.

acumentin : அகுமென்டின் : இரத்தத்தில் உள்ள பல்முளைக் கரு அணு மற்றும் இரத்த விழுங்கணுக்களில் காணப்படும் ஒருவகைப் புரதம். இது இவ்வாறுக்களின் செயல்களை அதிகப்படுத்தக் கூடியது.

acuminate : கூர்மை; நுண் கூர்மை.

acupan : அக்குபன் : 'நெஃபோபன்' என்ற மருந்தின் வணிகப் பெயர்.

acupressure : ஊசியழுத்த முறை : ஊசியினால் நரம்பு மற்றும் குருதி நாளத்தை அழுத்தி நோயைக் குணப்படுத்தும் முறை.

acupuncture : அலகு மருத்துவம்; அலகுமுனை மருத்துவம் : உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஊசியால் துளையிட்டு நோயைக் குணப் படுத்தும் அல்லது நோயைக் குறைக்கும் மருத்துவமுறை.

acus : கூரான, ஊசி.

acusection : மின் அறுவை ஊசி வெட்டு.

acusector : மின் அறுவை ஊசி.

acute : திடீர்; கடிமிகு; மிகுந்த; குறுகிய காலத்தில் துவங்கிய கடுமையான : ஒரு நோயானது திடீரெனத் துவங்கிக் குறுகிய காலத்திலேயே கடுமையான அறிகுறிகளை ஏற்படுத்துதல்.