பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/689

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

microfold cell

688

microneurosurgery


கின்றன. இவை ஈரமான இரத்தப்படலத்தில் அசைவதைக் காணலாம்.

microfold cell : நுண்மடிப்பு உயிரணு : நுண்மடிப்புகளை உடைய பேயர் பட்டைகளின் மேல் படிந்துள்ள குடல் சளிச் சவ்வு உயிரணு, இது உயிரணுச் சுவருக்குள் உள்ள இடைவெளியை அணுகுவதற்கு நுண் வெள்ள ணுக்கள் நுழைவதற்கு அனுமதிக்கிறது.

microfracture : நுண் எலும்பு முறிவு : ஒர் எலும்பில் ஏற்பட்டுள்ள நுண்ணிய முற்றுப்பெறாத முறிவு அல்லது பிளவு.

microgamete : நுண்பாலணு : ஒட்டுயிர் நுண்மத்தின் பாலினச் சுழற்சியிலுள்ள இயங்கும் இணைப்புப் பாலணுக்கள் இரண்டில் சிறிய (ஆண்) பாலனு.

micrognathia : சிறுதாடை : கீழ்த்தாடை.

micrograph : நுண் வரைபடம் : 1. நுட்பமான அசைவுகளை உருப்பெருக்கி, பதிவு செய்வதற்கான ஒரு சாதனம், 2. நுண்ணோக்காடி மூலம் பார்க்கப்படும் ஒரு பொருளின் அல்லது மாதிரிப் பொருளின் ஒளிப்படம்.

microgynon : மைக்ரோஜினான் : வாய்வழி உட்கொள்ளப்படும் கருத்தடை மருந்து.

microinjector : நுண் மருந்து ஊசி : மருந்துகளின் மிக நுண்ணிய அளவுகளை உடலில் ஊசி மூலம் செலுத்துவதற்கான ஒரு சாதனம்.

microinvasion : நுண்திசுத் தாக்கம் : எலும்புத்தசைப் புற்றுக்கு அடுத்துள்ள திசுவின் தாக்கம்.

micromanipulator : நுண்சிகிச்சை நோக்காடி : நுண்கூறாக்கம், நுண் மருந்து ஊசி போடுதல், பிற நுண்ணிய நடவடிக்கைகள் போன்றவற்றில் பயன்படுத்தப் படும் நுண்ணோக்காடி.

micromethod : நுண்நிகழ்முறை : பொருள்களின் மிக மிக நுண்ணிய அளவுகளைக் கையாள்வதற்கான ஒரு வேதியியல் அல்லது இயற்பியல் நடைமுறை.

micron : மைக்ரோன் : பதின் மான நீட்டலளவை அலகில் பத்து இலட்சத்தில் ஒருபகுதி.

microneedle : நுண் ஊசி : நுண் நூறாக்கத்தில் பயன்படுத்தப்படும் மிக நுண்ணிய ஊசி.

microneurosurgery : நுண்நரம்பு அறுவை மருத்துவம் : மிக நுண்ணிய நாளங்களிலும், நரம்பு மண்டலத்தின் உறுப்புகளிலும் செய்யப்படும் மிக நுட்பமான அறுவை மருத்துவம் பெருமளவில் உருப்பெருக்கம் செய்யப் பட்டு இந்த மருத்துவம் செய்யப்படுகிறது.