பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

adenolipoma

71

adenopharyngitis


தசைமிகையான வளர்ச்சி, இதனால் மூச்சடைப்பு ஏற்படு வதுடன், கேட்கும் திறனும் குறையும்.

adenolipoma : சுரப்பிக் கொழுப்புக் கட்டி : கொழுப்புத் திசுக்களையும் சுரப்பித் திசுக்களையும் இணைந்து பெற்றுள்ள ஒரு வகைக் கழலை.

adenology : சுரப்பியியல்.

adenolymphoma : சுரப்புநிண நீர்க்கழலை : சீதப்படலத் திசுக்களையும் நிணநீர்த் திசுக்களையும் இணைந்து பெற்றுள்ள ஒரு தீங்கிலாப் புற்றுவகை. இது பெரும்பாலும் கன்னத்தில் உமிழ் நீர்ச் சுரப்பியில் உருவாகும். முகத்தில் ஒரு பக்கத்தில் வலி இல்லாத வீக்கமாக இது துவங்கும். காலப்போக்கில் இது ஒரு கழலையாக உருமாறும்.

adenoma : சுரப்பி அழற்சி; கழலைக் கட்டி; சுரப்பிக் கட்டி, கோளப்புற்று; சிறு சுரப்பிக் கட்டி : சுரப்பித் திசுக்களில் உண்டாகும் கழலைக் கட்டி.

adenomalacia : சுரப்புத் திசு மென்மையாதல்.

adenomatoid : சுரப்பிக் கட்டி.

adenomatosis : சுரப்பிப் பெருக்கம் : சுரப்பித் திசுக்கள் பெருக்கமடைதல்.

adenomegoly : சுரப்பிப் பெருக்கம்; சுரப்பி உருப் பெருக்கம்.

adenomyofibroma : சுரப்பித் தசை நார்த்திசுக் கட்டி : சுரப்பித் திசுக்களையும் தசைநார்த் திசுக்களையும் பெற்றுள்ள கழலை.

adenomyoma : கருப்பைக் கழலை : தசையும் சுரப்பிக் கூறுகளும் கொண்ட கழலைக் கட்டி பொதுவாக இது கருப்பையில் தோன்றும் கடுமை யல்லாத வளர்ச்சியைக் குறிக்கும்.

adenomyomatosis : கருப்பைச் சுரப்பித் திசுக்கட்டி : கருப்பையில் சுரப்புத் திசுக் கட்டி வளர்ச்சி அடைதல்.

adenomyometritis : சுரப்ப்பைத் திசு அழற்சி : கருப்பையில் உண் டாகும். நோய்த்தொற்றினால் கருப்பையில் உள்ள திசுக்கள் அழற்சியுற்று பெருக்கம் அடைதல்.

adenomyosis : கருப்பைச் சுரப்புத் திசுக்கட்டி :

adenoncus : சுரப்பில் பெருக்கம்; சுரப்பி உருப்பெருக்கம்.

adenopathy : சுரப்பி நோய்; நிணநீர் சுரப்பிப் பெருக்கம்; கோள நோய் : ஒரு சுரப்பியில், குறிப்பாக ஒரு நிணநீர்ச் சுரப்பியில் உண்டாகும் ஏதேனும் நோய்.

adenopharyngitis : மூக்கடித் தொண்டைச் சதை அழற்சி : முக்கடிச் சதையும் தொண்டை மற்றும் தொண்டைச் சதையும் அழற்சி அடைதல்.