பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/731

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

neurocysticercosis

730

neuroepithelial ..


கள். நரம்பு நார்க்கழலை, மூளைத் திசுக் காழ்ப்பு, வான் ஹறிப்பிள்-லிண்டா நோய், ஸ்டர்ஜ்-வெபர் நோய், உறுப்பு ஒத்தியங்காமை போன்ற நோய்கள் இவற்றில் அடங்கும்.

neurocysticercosis : நரம்பியல ஒட்டுண்ணி அழற்சி : முட்டைப்பருவ நாடாப்புழுவினால் உண்டாகும் நரம்பியல் ஒட்டுண்ணி அழற்சி நோய். இதில் சிறிய புடைப்பு நைவுப் புண் உண்டாகும்.

neurocytolysis : நரம்பு உயிரணு அழிவு : நரம்பு உயிரணு அழிதல்.

neuro dermatitis : நரம்புத் தோலழற்சி; நரம்பியத் தோலழற்சி : தோலில் தடிமனான படலங்கள் ஏற்படுதல். தடிப்பு கனமாக, எரிச்சல் அதிகமாகிறது. சொரிவதால் தோல் மேலும் தடிப்பாகிறது.

neurodiagnosis : நரம்பு நோய் நாடல் : நரம்பியல் கோளாறுகளைக் கண்டறிதல்.

neuroectoderm : நரம்பு கருமுளைப்புறத்தோல் : மைய மற்றும் வெளிப்புற நரம்பு மண்டலத்தை உருவாக்கும் கருமுளை புறத்தோல்,

neuroendocrine cells : நரம்பு நாளமில் சுரப்பு நீர் உயிரணுக்கள் : புற மற்றும் அக நுரையீரல் காற்றுவழிகளின் பல்வேறு மண்டலங்கள் நெடுகிலும் அடிப்புற சவ்வுடன் தொடர்புகொண்டு அமைந்துள்ள நுரையீரல் சுரப்பு நீர் உயிரணுக்கள். இந்த உயிரணுக்களில் சில தங்கள் நுண்குடல் இழை நீட்சிகளுடன் உயிரணுச் சுவரின் உட்பகுதி இடைவெளிகள் நீண்டிருக்கும். இந்த உயிரணுக்கள் நீரில்லாத திசுப்பாய்மத்தில் சவ்வு சூழ்ந்த எலெக்டிரான் அடர்ந்த கொப்புளங்களைக் கொண்டிருக்கும். இவற்றை ஏபியூடி உயிரணுக்கள், குல்சிட்ஸ்கி அல்லது ஃபேயர்ட்டெர் உயிரணுக்கள் என்றும் கூறுவர்.

neuroendocrine tumours : நரம்பு நாளமில் சுரப்பு நீர்க்கட்டிகள் : உக்கிரமாக மாறக்கூடிய ஒரு கட்டி வளர்ச்சி. இது நரம்பு நாளமில் சுரப்பு நீர்க்குணங்களையுடைய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இயக்குநீர் களைச் சுரக்கிறது. இவை கருமுளை நரம்புக் கொண்டை உயிரணுக்களி லிருந்து உருவாகின்றன். இவை. ஏ.பி.யூ.டி கட்டிகள் புற்று போன்ற கட்டிகள், இன்சுலினோமா, உடல் உள்ளுறப்பு கட்டிகள், குளுகாகோனாமா, சோலிங்கர்எலிசன் நோய் ஆகியவை இதற்குச் சில எடுத்துக்காட்டுகள்.

neuroepithelial bodies NEB : நரம்புத் தோலிழைமப் பொருள்கள் : மூளைச் சுரப்பு நீரை உற்பத்தி செய்யும் உள் நுரையில்