பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/733

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

neurolysis

732

neuropathic


neurolysis : நரம்புத்திசு அழிவு : நரம்புத் திசுக்கள் அழிந்துபடுதல்.

neuroma (neuromata) : நரம்புக் கட்டி.

neuromuscular : நரம்பு-தசை சார்ந்த : நரம்பு மற்றும் தசையைக் குறிக்கிற.

neuromuscular : நரம்புத்தசை சார்ந்த.

neuromyasthenia : நரம்புத் தசை நலிவு : பெரும்பாலும் உணர்ச்சியி னால் உண்டாகிற தசை நலிவு.

neuromyelitis : நரம்புமுதுகுத் தண்டு அழற்சி : நரம்பு-மற்றும் முதுகுத் தண்டு வீக்கம்.

neuromyopathy : நரம்புத்தசை நோய் : தசையை வழங்கும் நரம்பில் ஏற்படும் ஒரு நோய் காரணமாக உண்டாகும் தசை நோய்.

neuromyxofibroma : நரம்புக் கட்டி : ஒரளவு திண்மமான, மெதுவாக வளர்கிற, வலி உண்டாகாத கட்டி இது கிடை மட்டத்தில் பரவும், செங்குத் தாக வளராது. இது மூளை நரம்பு, நாவடி நரம்பு, பரிவுநரம்பு ஆகியவற்றில் உண்டாகும்.

neuronal: நரம்பணு சார்ந்த : ஒரு நரம்பணு தொடர்புடைய.

neurone : நரம்பணு; நரம்புக் கூறு : நரம்பு மண்டலத்தின் அடிப் படைக் கட்டமைப்பு அலகு. அது நரம்பு உயிரணுக்களுக்குத் துடிப்புகளை கொண்டு செல்கிறது.

நரம்பணு

neuronitis : நரம்பு அழற்சி : நரம்பில் அல்லது நரம்பு உயிரணுவில் எற்படும் வீக்கம். இது முக்கியமாக முதுகுத்தண்டு நரம்புகளின் உயிரணுக்களிலும் வேர்களிலும் உண்டாகும்.

neuropath : நரம்பு நோயாளி : அளவுக்கு மீறிய நரம்புணர்ச்சிக் கோளாறுடையவர்.

neuropathic : நரம்பு நோய் சார்ந்த : நரம்பு நோயிய நரம்பு மண்டல நோய் தொடர்புடைய.