பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/755

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



O

O antigen : “ஓ" காப்பு மூலம் : பாக்டீரிய கொழுப்புப் பன்முகச் சர்க்கரைப் புரதக் காப்பு மூலம், இது குடற்காய்ச்ச பாக்டீரியாவை குருதி வடி நீரியல் முறையில் வகைப்பாடு செய்யப் பயன்படுத்தப்படுகிறது. ஏ, பி, ஒ குருதிக்கு குழுமத்தின் ஏ,பி காப்பு மூலங்களுக்கான குருதிச் சர்க்கரைக் குறைபாட்டுகான முன்னோடி.

oat cell carcinoma : புல்லரிசி உயிரணுப்புற்று : புறப்படல நுரையீரல் உயிரியல் பொருள் உக்கிர வளர்ச்சி. இது சளிச்சவ்வின் கீழடி ஊனீர் நாளங்கள் நெடுகிலும் பரவுகிறது. நுரையீரல் புற்றுகளில் மூன்றில் ஒரு பகுதி இந்த வகையைச் சேர்ந்தது. இதை முன் கணிப்பு செய்வது கடினம். ஏனென்றால், அறுவை மருத்துவம் முன் கணிப்புக்கு உதவுவதில்லை. அதேபோன்று, வேதியியல் ஆய்வு முறையும், ஊடுகதிர் ஆய்வுமுறையும் முன் கணிப்புக்கு உதவுவதில்லை. ஏனெனில், மருத்துவம் தொடங்கு வதற்கு முன்னரே புற்றுக் கட்டி நன்கு பரவிவிடுகிறது.

oath : உறுதிமொழி.

obese : பருமன்.

obesity : உடல் பருமன்; கொழுமை; பரு உடலமை : அளவுக்கு மீறிய கொழுப்புக் காரணமாக உடல் மட்டுமீறித் தடிமனாக இருத்தல். உடலின் எரியாற்றல் தேவைகளுக்கு அதிகமாக உணவு உண்பதால் இது உண்டாகிறது. உடலின் எடை/உயுர வீதத்தின் அடிப்படையில் பருமன் அளவை அளவிடலாம்.

obdormition : மரமரப்பு : உணர்வு நரம்பின் மீது மிகை அழுத்தம் காரணமாக கை அல்லது காலில் உள்ளதிர்வு ஏற்பட்டு உணர்வற்றுப்போதல்.

Ober's test : ஒபர் சோதனை : இடுப்பெலும்புக்குழாய், நீட்டுத் தசைமுகவுறை ஆகியவற்றின் முறிவைக் கண்டறியும் சோதனை. இது இளம்பிள்ளை வாதத்தில் இந்த முறிவு ஏற்படுகிறது. அமெரிக்க எலும்பு மருத்துவ அறிஞர் ஃபிராங்க் ஒபர் பெயரால் அழைக்கப்படுகிறது.

obex : இதயக்கீழறைப் பின்வரம்பு : நான்காவது இதயக் கீழறையின் பிற்பகுதி வரம்பெல்லை. இது மத்திய குழாயின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

objective : புறநோக்கு; பார்க்கக் கூடிய; உணரத்தக்க; குறிக்கோள் :