பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/761

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Oedema

760

oesophagus


உண்டாகும். இது இரத்தத்தில் ஏற்படலாம். இதய நுரையீரல் மண்டலங்ளிலும் சிறுநீரக மண்டலத்திலும் ஈரலிலும் உண்டாகலாம்.

oedema, cardiac: இதய வீக்கம்.

oedema, nutritional : ஊட்டக் குறை வீக்கம்.

oedema, renoi : நீரகநலி வீக்கம்.

oedema, pulmonary : நுரையீரல் வீக்கம்.

оedipus complex : ஈடிப்பஸ் உணர்வு; தந்தையை வெறுத்த தாய்ப்பாச மிகைப்பு : உளவியலின்படி எதிர்பாலராகிய பெற்றோரிடம் பிள்ளைகளுக்கு உள்ளார்ந்து இருப்பதாகக் கருதப்படும் அடங்கிய உள்ளுணர்ச்சி. தாயிடம் மகனுக்குள்ள இந்த உட்செறிவான பற்கள்.

oesophageal : உணவுக் குழாய் சார்ந்த; இரைக் குழல் சார்ந்த : உள்ளுணர்வு, தந்தைமீது அவனுக்குப் பொறாமையைத் தோற்று விக்கிறது. இதனால் அவன் உணர்ச்சிப் போராட்டத்திற்கு ஆளாகிறான். இதனைத் தனது குழந்தைப் பருவப் பாலுணர்வு என்ற கோட்பாட்டில் உளவியலறிஞர் ஃபிராய்டு விளக்கி உள்ளார். ஆண் குழந்தைகளிடம் இந்த உணர்வு இருப்பது இயல்பு என்று அவர் கூறியுள்ளார்.

oesophageal Artesia : உணவுக் குழாய் வளர்ச்சி.

oesophagectasis : உணவுக் குழாய் அழற்சி : உண்குழல் ஊதல்.

oesophagectomy : உணவுக் குழாய் அறுவை மருத்துவம்; உண்குழல் எடுப்பு : உணவுக் குழாயின் ஒரு பகுதியை அல்லது அதனையும் முழுவதுமாகத் துண்டித்து எடுத்தல்.

oesophagitis : இரைக்குழல் அழற்சி; உணவுக் குழாய் அழற்சி : உணவுக் குழாய் வீக்கம்.

oesophagus : உணவுக் குழாய்; உண் குழல் : தொண்டையை கடந்து இரைப்பைக்குள்