பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/789

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

оxycephaly

788

oxymetry


வணிகப்பெயர். குருதியணுப் பற்றாக்குறையின்போது பயன் படுத்தப்படுகிறது. இதனைத் திசுக்கள் ஈர்த்துக் கொள்கின்றன.

oxycephaly : கூம்பு மண்டை : திரிபான வடிவத்தில் உள்ள மண்டையோடு. இது உச்சி மற்றும் வகிட்டு இணைவுகள் உரிய காலத்துக்கு முன்னதாகவே மூடிக் கொள்வதால் உண்டாகிறது. இதனால், தலை விரைவாக மேல்நோக்கி வளர்ந்து, அதற்கு நீண்ட, குறுகிய, கூம்பு வடிவத்தைக் கொடுக்கிறது.

oxygen : உயிரியம்; ஆக்சிஜன்; உயிரகம்; பிராணவாயு; உயிர்வளி : நிறமற்ற மணமற்ற வாயுத் தனிமம். உயிர்களுக்கு இன்றியமையாத சுவாச வாயு. இது வாயு மண்டலத்தில் 20% உள்ளது. மருத்துவத்தில் நீள்கொள் உருளைகளில் மிகுந்த அழுத்தத்துடன் வாயுவாகப் பயன்படுத் தப்படுகிறது.

oxygen, cylinder : உயிர் வளி உருளை.

oxygenation : ஆக்சிஜனேற்றுதல்; உயிரக மூட்டுதல்; பிராண வாயு ஊட்டுதல்; உயிர்வளியேற்றுதல் : உயிர்ப்பு மூலம் இரத்தம் முதலியவற்றுக்கு ஆக்சிஜன் செறிவூட்டுதல்.

oxygenetor : செயற்கை நுரையீரல் : இதய அறுவை மருத்துவத்தின் போது பயன்படும் செயற்கை ஆக்சிஜனுட்டக் கருவி.

oxyhaemoglobin : ஆக்சிஜனேற்றிய குருதிப் புரதம் : ஆக்சிஜனேற்றிய குருதி உருண்டைப் புரதம் (ஹேமோகுளோபின்).

oxyhood : ஆக்சிஜன் முகடு : குழந்தையின் தலையில் பொருந் தக்கூடிய ஒரு பிளாஸ்டிக் முகடு. இது புறத் தூண்டுதல் இல்லாமல் குழந்தை சுவாசிப்பதற்கு மாறாத செறிவுடைய ஆக்சிஜனை வழங்குகிறது.

oxymel : தேம்புளிக்காடி : புளிக் காடியுடன் தேன் கலந்த பானம்.

oxymetazoline : ஆக்சிமெட்டாசோலின் : மூக்குக் குருதி நாள சுறுக்க மருந்து. முக்கடைப்பின் போது இதனால் உடனடியாகக் குணம் தெரியும் ஆனால், இந்தக் குணம் குறுகியகாலமே நீடிக்கும். இதனை அடிக்கடிப் பயன்படுத்தினால் எதிர்க் குருதித் திரட்சி ஏற்படும் அபாயம் உண்டு.

oxymetholone : உயிர்ப் பொருள் ஊக்கி : உயிர்ப் பொருளாக்கு தற்குரிய ஒரு கூட்டுப்பொருள்.

oxymetry : ஆக்சிஜன் அளவீடு : குருதியிலுள்ள ஆக்சிஜன் அளவை, குருதியின் மாதிரியை எடுத்து, காதுக் குழாயுடன் அல்லது விரல் நுனியுடன்