பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

aftercataract

84

agamglionic


நோயிலிருந்து குணமடைந்து உடல்தேறி நலம்பெறும் போதும், மீண்டும் பழைய வாழ்க்கைக்குத் திரும்பும் போதும் அளிக்கப்படும் பிற்பாதுகாப்பு அல்லது கவனிப்பு.

aftercataract : கண் புரையறுவைக்குப்பின் : கண்புரை அறுவை மருத்துவம் செய்த பின்னரும் புரை நீடிக்கும் நிலைமை.

after effect : பின்விளைவு : உயிர்த்தசை இயக்கத்தைத் தூண்டும் பொருளின் தொடக்க விளைவுக்குப் பின் ஏற்படும் ஒர் எதிரெதிர் விளைவு.

after image : பின் தோற்றம்; மீள் வடிவம் : ஒரு பொருளைப் பார்த்த பின்பு மனத்தில் சிறிது நேரம் பதிந்திருக்கும் உருவம். இந்த உருவம் அதன்இயல்பான முனைப்பு வண்ணங்களுடன் இருக்குமானால் அது 'நேர் பின் தோற்றம்' எனப்படும். ஒளிரும் பகுதிகள் கருப்பாகவும் கரும் பகுதிகள் ஒளிர்வுடனும் இருக்குமாயின் அது எதிர் பின்தோற்றம் எனப்படும்.

afterload : பின்பளு; பின்சுமை : இதயத் துடிப்பின் போது இடது இதயக் கீழறை சுருங்கி இரத்தத்தை உடலுக்குச் செலுத்த முற்படும்போது இதயத்தில் உள்ள எதிர்விசை, இதயச் சுருக்கத்தின் போது இதயக் கீழறைச் சுவர்களில் உண்டாகும் எதிர்விசை அல்லது பின்னழுத்தம்.

afterpains : பின்நோவு : மகப் பேற்றுக்குப் பின்பு, கருப்பைத் தசை இழைகள் சுருங்குவதன் காரணமாக உண்டாகும் நோவு.

aftertaste : சுவை நீட்டிப்புணர்வு : ஒரு பொருளை சுவைத்த பின்னர் நீண்டநேரம் அச்சுவை நாக்கில் உணரப்படுதல்.

afunction : செயலிழப்பு.

agalactia : தாய்ப்பால் சுரப்பின்மை; பால் சுரக்காமை : மகப் பேற்றுக்குப் பிறகு தாயிடம் தாய்ப்பால் சுரக்காமல் இருத்தல் அல்லது குறைவாகச் சுரத்தல்,

agalactosuria : பாலிலா சிறுநீர்.

agalactous : பால் சுரப்பு நிறுத்தல்; பாலூட்டாமை.

agamic : கருவுறா இனப் பெருக்கம் : பால் கலப்பு இல்லாமல் அமைந்த ஆண்பெண் கருத்தொடர்பின்றி உண்டான.

agammagalobuliaemia : தொர்று நோய்த் தடைக் காப்பின்மை : இரத்தத்தில் “காமாகுளோபுலின்' இல்லாதிருத்தல். இதனால் நோய்த் தொற்றினைத் தடுக்கும் திறன் இல்லாமல் போகிறது.

agamous : பாலுறுப்பு இல்லா.

agamglionic : நரம்பு முடிச்சில்லா.