பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/852

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

phrenology

851

physiopathologic


phrenology : தலை அமைப்பியல்; கபாலவியல் : மண்டையோட்டின் வெளியமைப்பு மூலம் பல்வேறு உறுப்புகளின் வளர்ச்சியை ஆராயும் அறிவியல்.

phrenoplegia : உதரவிதான வாதம் : உதரவிதானம் செயலிழந்து போதல்.

phrenotropic : மருந்து உளவியல் விளைவு : சிலவகை மருந்துகள் மனத்தில் ஏற்படுத்தும் விளைவுகள்.

phrogen : காய்ச்சல் பொருள்.

phrogenic : காய்ச்சல் உண்டாக்கக்கூடிய.

phrynoderma : உலர்தோல்நோய் : வைட்டமின் ஏ அல்லது (தவளைச் சொறி) அவசிய கொழுப்பமிலங்களின் குறையால் தோலில் மயிர் வேர் காழ்ப்பொருள் மிகைப்பு.

phthalylsulphathiazole : தாலைல் சல்ஃபாதையாசோல் : உணவுக் குழலினால் குறைந்த அளவே ஈர்த்துக் கொள்ளப்படும் ஒரு சல்ஃபோனமைடு மருந்து முன்புகுடல்நோய்களின்போது, அடிவயிற்று அறுவை மருத்துவம் மூலம் பயன்படுத்தப்பட்டது.

phthirus : ஃப்தைரஸ் : பூச்சி மயிர்கள், கண்புருவங்கள், கண் ணிைமை மயிர்களைத்தொற்றும், ஃப்தைரஸ் ப்யூபிஸ் உள்ளடங்கிய பேன் இனம்.

phthisis : ஈளை நோய்; காச நோய்; நுரையீரல் காசநோய் : நுரையீரல் காசநோயைக் குறிக்கும் ஒரு பழைய சொல்.

physiognomy : முக அமைப்பியல் : 1. முக அமைதி 2. முகபாவரும் தோற்றமும்.

physeptone : ஃபிசெப்டோன் : மெத்தாடோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

physic : மருத்துவத் தொழில் : நோய் தீர்க்கும் கலை, மருத்துவம்; பண்டுவம்; மருந்து.

physician : மருத்துவர் : மருத்துவத்தில் தகுதி பெற்றவர்.

physioky : மருந்து போன்ற : மருந்தை நினைவூட்டுகிற.

physicochemical : இயற்பியல்-வேதியியல் சார்ந்த : இயற்பியல் மற்றும் வேதியியல் தொடர்பான.

physiology : உடலியல்; உடலியங்கியல்; உடலியக்கவியல் : உடலின் இயல்பான இயக்கம் பற்றி ஆராயும் அறிவியல், உடலின் இயற்கையான கட்டமைப்பு, அவற்றின் வழக்கமான செயல்முறை பற்றி ஆராய்தல்.

physiopathologic : இயல்நோய்க் குறியியல் : 1. உடலியங்கியல் மற்றும் நோய்க்குறியியல் பற்றியது. 2. ஒரு இயல்பான இயக்கத்தில்