பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/867

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pluriceptor

866

pneumatotherapy


pluriceptor : பல்குழு ஏற்பி : காப்புப் புரதத்தோடு ஒன்றியிணையும் இரண்டு தொகுதிகளுக்கு மேல் கொண்ட ஒரு ஏற்பி.

pluriparity : பலகர்ப்பம் : விளைவைப்பற்றியில்லாமல் உயிர்ப்பு நிலையை அடைந்துள்ள மூன்று அல்லது மேற்பட்ட கர்ப்பங்கள்.

pluripotent : பல் திறன் : 1. பல்வேறு வகை உயிரணுக்களாக மாறிவளரும் தன்மை கொண்ட ஒரு கருவணு. 2. பல்வேறு செயல்களைச் செய்யும் திறமை உள்ள.

pluriresistant : பல எதிர்நிலை : பல்வேறு பொருள்கள், குறிப்பாக நோயுயிர் (கிருமி) எதிர்ப்பு மருந்துகளின் வினை எதிர்நிலை.

PMS : மாதவிடாய் முந்து நோய்.

pneumarthrogram : மூட்டுவளிய வரைபடம் : ஒரு உயவு மூட்டுக்குள் காற்றை ஊசிமூலம் செலுத்தி எடுக்கப்பட்ட எக்ஸ்ரே படம்.

pneumarthrography : மூட்டுக்காற்றுப் படவரைவு : உயவு மூட்டுக்குள் காற்றை ஊசி மூலம் செலுத்திய பிறகு எக்ஸ்ரே படமெடுத்தல்.

pneumatisation : காற்றூட்டம் : பொட்டெலும்பின் முகையுருத் துருத்தம் மற்றும் முக்குப் பக்கக் காற்றறைகள் போன்ற எலும்பில், வளிநிறை குழிவறைகள் அல்லது உயிரணுக்களை உண்டாக்குவது.

pneumotocoele : நுரையீரல் வீக்கம் : 1. நுரையீரல் பிதுக்கம் 2. ஸ்டேஃபிலோகாக்கஸ் கிருமித்தொற்று நிமோனியாவில் நுரையீரல் திசுவுக்குள், ஒரு மென்சுவர் கொண்ட காற்றுக் குழிவறை, 3. விரைப்பையில் வளி வீக்கம் .

pneumatodyspnoеa : நுரையீரல் மூச்சுத்திணறல் : மூச்சுப்பாதைக் கோளாறால் ஏற்படும் மூச்சுத் திணறல்.

pneumatology : வளியவியல் : காற்று மற்ற வாயுப் பொருள்களைப் பற்றி படித்தறியும் அறிவியல்.

pneumatograph : நுரையீரல் பட வரைவி : மூச்சியக்கத்தால் மார்புச் சுவர் அசைவுகளைப்பதிவு செய்யும் கருவி.

pneumatometer : மூச்சுமானி.

pneumatotherapy : நுரையீரல் வளிய மருத்துவம் : 1. நுரையீரல் நோய்களுக்கு மருத்துவம், 2. இறுக்கப்பட்ட செறிவிழந்த